பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/497

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Dynaload drivers

496

dynamic caching


அழித்திடக்கூடிய ஒளியியல் வட்டுகளில் உச்சி இருத்தி வைப்புப் படுகை, அடிநிலை விரிவாக்கப் படுகை என்ற இரு சாயமிட்ட பிளாஸ்டிக் படுகை கள் பயன்படுத்தப்படுகின்றன.

Dynaload drivers : நிகழ்நேர இயக்கிகள் : ஐபிஎம் பீசி டாஸ் 7 இயக்க முறைமையில் Dynaload என்ற கட்டளை உண்டு. டாஸ் சின்னத்தில் இக்கட்டளையைத் தந்து, சில சாதன இயக்கிகளை நினைவகத்தில் ஏற்றிக் கொள்ள முடியும். பொதுவாக, சாதன இயக்கிகள் config. sys என்னும் தானியங்கிக் கட்டளைக்கோப்பு மூலமாகவே நினைவகத்தில் ஏற்றப் படுகின்றன. கணினி இயக்கப்படும்போதே இது நிகழ்ந்து விடும். புதிதாக சாதன இயக்கி எதனையும் ஏற்ற வேண்டுமெனில் config sys கோப்பில் திருத்தம் செய்து மீண்டும் கணினியை இயக்கவேண்டும், ஆனால் Dynaload மூலம் config. sys கோப்பினைத் திருத்தாமலே சாதன இயக்கியை நினைவகத்தில் ஏற்ற முடியும்.

dynamic : இயங்குநிலை : மாஸ் (MOS) தாங்கிகளில் தரவு மின் சக்தியாக மாற்றும் மின்சுற்று. பொதுவாக நிலையற்ற தன்மைபுடைய, இதை அடிக்கடி புதுப்பிக்க வேண்டும்.

dynamic address translation (DAT) : இயங்குநிலை முகவரி மொழி பெயர்ப்பு (டாட்) ;இயங்கு நிலை முகவரி மாற்றம்;மெய்த்தோற்ற சேமிப்பு அமைப்புகளில், மெய்த்தோற்ற சேமிப்பு முகவரிகளை உண்மை சேமிப்பு முகவரிகளாக நிரல் இயக்கத்தின் மூலம் மாற்றுதல்.

dynamic allocation : இயங்கு நிலை ஒதுக்கீடு;நிகழ்நேர ஒதுக்கீடு : ஒரு நிரல் இயங்கிக் கொண்டிருக்கும்போதே தேவைக்கேற்ப நினைவகத்தில் இடம் ஒதுக்கீடு செய்தல். அவ்வாறு ஒதுக்கப்பட்டி நினைவகத்தை, நிகழ்நேரத்திலேயே விடுவிக்கவும் முடியும். இதனால் நிகழ்நேரத்தில் தேவையான தரவுக் கட்டமைப்புகளை உருவாக்கிக் கையாண்டு பின் விடுவிக்க முடிகிறது. பாஸ்கல், சி, சி++ போன்ற மொழிகளில் இதற்கான வழிமுறைகள் உள்ளன.

dynamic binding : இயங்கு நிலை கட்டுமானம் : ஒரு கண நேரத்திலுள்ள நிலைமைகளின் அடிப்படையிலான ஒட்ட நேரத்தில் ஒரு நிரல்கூறை அல்லது பொருளை இணைத்தல்.

dynamic caching : இயங்குநிலை இடைமாற்று : நிகழ்நேர இடைமாற்று : அடிக்கடி கையாள வேண்டிய தகவல்களை