பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/498

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

dynamic compression

497

dynamic keys


உடனடியாக எடுத்தாள வசதியாக, முதன்மை நிவைகத்திலுள்ள தரவுகளை நுண்செயலி தனக்கருகில் ஒர் இடைமாற்று நினைவகத்தில் (cache memory) வைத்துக்கொள்ளும். இதனால் கணினியின் செயல்பாட்டு வேகம் அதிகரிக்கும். மிக அண்மையில் பயன்படுத்திய தரவுவை இடைமாற்று நினைவகத்தில் வைத்துக் கொள்ளல் நிகழ்நேர இடைமாற்று எனப்படுகிறது. இடைமாற்று நினைவகத்தின் கொள்திறன் அடிப்படையில் இப்பணி மேற் கொள்ளப்படுகிறது. குறிப்பாக, தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு பயன்பாட்டுத் தொகுப்புக்கு எவ்வளவு நினைவகப் பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது என்ற அடிப்படையில் இல்லாமல், எவ்வளவு நினைவகப் பகுதி கையிருப்பில் உள்ளது என்ற அடிப்படையில் இடைமாற்று நினைவகக் கொள்ளளவு தீர்மானிக்கப்படும்.

dynamic compression : இயங்கு நிலை இறுக்கிச் சுருக்கல் : இயல்பு நேரத்தில் தரவுகளை அழுத்தி வைப்பதற்கும் தளர்த்தி விடுவதற்குமான திறம்பாடு. எடுத்துக்காட்டு வட்டில் எழுதுதல் அல்லது அதிலிருந்து படித்தல்.

dynamic data : விரைந்து மாறும் தரவு.

dynamic data exchange : இயங்கு நிலை தரவுப் பரிமாற்றம் : ஒர் எந்திரத்தில் அமைந்துள்ள பல்வேறு பயன்பாட்டுத் தொகுதிகளுக்கிடையே தரவுகளை மாற்றம் செய்வதற்கான திறம்பாடு. எடுத்துக் காட்டு : கணக்கீட்டு விரிதாள் தரவுகளை சொல் பகுப்பி மாற்றுதல். இவ்வாறு, ஒர் விரிதாளில் உள்ள தரவுகளைப் பயன்படுத்துகிற ஒரு சொல் பகுப்பியிலுள்ள அறிக்கை, விரிதாள் இலக்கங்கள் மாற்றப்படும் போது தானாகவே நாளது தேதி வரையில் திருத்தியமைக்கப்படுகிறது.

dynamic dump : இயங்கு நிலை திணித்தல் : ஒரு நிரல் தொடரைச் செயல்படுத்தும்போது நடைபெறும் திணித்தல்.

dynamic font : இயங்கு நிலை எழுத்துரு.

dynamic keys : இயங்குநிலைத் திறவிகள்;நிகழ்நேர மறைக்குறிகள் : பிணையம் அல்லது இணையத்தில் தரவு மறையாக்கம் செய்யப்பட்டு (Encryption) அனுப்பிவைக்கப்படுவதுண்டு. மறுமுனையில் மறைவிலக்கம் செய்யப்பட்டு மூலத்தரவு பெறப்படும். இவ்வாறு