பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/500

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

dynamic partitioning

499

dynamic slip


ளடக்கிய ஹெச்டிஎம்எல் ஆவணம்.

dynamic partitioning : இயங்குநிலை பிரிவினை : மையச் செயலகத்தின் (CPU) நினைவுப் பதிப்பியை, பல்வேறு செயல் முறைகளைத் திறம்படச் சேமித்து வைக்கும் வகையில் பல்வேறு வடிவளவுகளைக் கொண்ட பகுதிகளாகப் பகுத்தல்.

dynamic RAM : இயங்குநிலை நேர் அணுகு நினைவகம் : அடிக்கடி புதுப்பிக்க வேண்டிய கணினி நினைவகம்.

dynamic random access memory (DRAM) : இயங்குநிலை குறிப்பிலா அணுகு நினைவகம்.

dynamic range : இயங்குநிலை வரிசை : மிகப்பலவீனமானது முதல் மிக வலுவானது வரையிலான சைகைகளின் வரிசை.

dynamic relocation : வேறிடம் மாறுதல்;இயங்குநிலை இருப்பிட மாற்றம் : செயல்பட்டுக் கொண்டிருக்கும் நிரலாக்கத் தொடர் முழுமையும் அல்லது ஒரு பகுதியையும் சேமிப்பகத்தின் ஒரு இடத்திலிருந்து வேறு இடத்துக்கு மாற்றுதல். புதிய இடத்திலிருந்து நிரலாக்கத் தொடர் தொடர்ந்து முறையாக இயங்குவதற்கு வசதியாக முகவரிக் குறிப்புகள் யாவும் சரி செய்யப்படும்.

dynamic scheduling : மாறும் வரிசைப்படுத்து முறை;இயங்கு நிலை நிலைப்படுத்தல் : சூழ்நிலைகளைப் பொறுத்து நொடிக்கு நொடி வேலையை வரிசைப்படுத்தும் கணினி.

dynamic simulation language (DSL) : இயங்குநிலை பாவனை மொழி; டிஎஸ்எல் : உயர்நிலை நிரலாக்கத் தொடர் மொழி, தொடர்முறையில் பொறியியல் மற்றும் அறிவியல் சிக்கல்களை போலி நிகழ்வாகச் செய்வதற்கு ஏற்ற மொழி, சாதாரன மாறுபாட்டுச் சமன்பாடுகளைத் தீர்க் கவும், நேரச்செயல்பாடு, மாறும் அமைப்புகளின் நிலையற்ற தன்மை ஆகியவற்றை ஆராய்வதற்கு மிகவும் ஏற்ற மொழி இதுவே.

dynamic slip : இயங்குநிலை ஸ்லிப் : இயங்குநிலை நேரியல் தட இணைய நெறிமுறை என்று பொருள்படும் Dynamic Serial Line Internet Protocol என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். இணையத்தில் ஸ்லிப் நெறிமுறைப்படி பயனாளரின் ஐபீ முகவரி ஒவ்வொரு முறையும் புதிதாக (ஒரு பட்டியலிலிருந்து) ஒதுக்கப்படும்.