பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/508

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

edit key

507

edit query


ஒரு களத்தை உருவமைக்கிற கணினிக் கட்டளை. ஒரு தொகுப்பு முகமூடி மூலம் இது பதின்மப் புள்ளிகளையும், அரைப் புள்ளிகளையும் டாலர் குறியீடுகளையும் தரவுக்குள் புகுத்துகிறது.

edit key : தொகுப்பு விடைக் குறிப்பு : செயல்முறையை தொகுப்பு முறையாக மாற்றுகிற விடைக் குறிப்பு இணைப்பு அல்லது செய்பணி விடைக் குறிப்பு.

edit line : தொகுப்பு வரி;பதிப்பு வரி : விரிதாள் அல்லது சொல் தொகுப்பு நிரலாக்கத் தொடர் பயன்படுத்தப்படும்போது திரையில் காட்டப்படும் நிலை அறிக்கை வரி. அடையாளம் சுட்டும் அம்புக்குறி அப்போது எங்கே இருக்கிறது என்றும், எவ்வளவு நினைவகம் மீதமுள்ளது என்றும், பயனில் உள்ள கோப்பின் பெயர் என்ன என்றும் பயனாளருக்கு இது கூறுகிறது. தரவுவின் வகைகளில் ஒன்று அல்லது இரண்டினைக் கூறலாம். அடையாளம் காட்டும் அம்புக் குறி இடத்தில் உள்ள உள்ளடக்கம் அல்லது தரவு திட்டத்தின் அமைப்பு போன்றவற்றை விரி தாளில் இது காட்டும்.

edit mask : தொகுப்பு முகமூடி : உருவமைவுக் குறியீடுகளைக் குறிக்கிற எழுத்துகளின் தோரணி. இதன் வழியாகத் தரவுகள் திரைக்காட்சிக்காக, அல்லது அச்சடிப்பதற்காக வடிகட்டப்படுகின்றன.

edit menu : பதிப்புக் கட்டளைப் பட்டியல்.

edit mode : தொகுக்கும் முறை;பதிப்பு நிலை : பல நிரலாக்கத் தொடர்களில் உள்ள முறை. முழு தரவுகளையும் மீண்டும் நுழைக்கத் தேவையின்றி தரவு கட்ட உள்ளடக்கங்களை மட்டும் எளிதாக மாற்ற உதவுவது.

editor : தொகுப்பி;பதிப்பி : வாசகங்களையும் பிற செயல்முறை அறிவுறுத்தங்களையும் இடைத்தொடர்பு மூலம் மறுஆய்வு செய்வதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு செயல் வரைவு.

edit play list : இயங்கு பட்டியலைத் தொகு.

edit programme : தொகுப்பு செயல் வரைவு : பயனாளரின் உட்பாட்டினைச் செல்லுபடியாக்கி, கோப்பில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பதிவேடுகளில் சேமித்து வைக்கிற தரவு பதிவுச் செயல்முறை. ஒரு கோப்பில் ஏற்கனவே இருக்கும் தரவை மாற்றுவதற்கு அனுமதிக்கிற செயல்முறை.

edit query : வினவல் தொகு.