பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/515

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

electron beam lithography

514

electronic calculators


அதே திசையில் மின்னணுக்கள் குறுகிய பாதையில் நகர்வது.

electron beam lithography : மின்னணுக் கற்றை கற்பாள அச்சு முறை : எலெக்ட்ரான் கற்றைகளைப் பயன்படுத்தி மின்சுற்று வழிகளை உண்டாக்குகிற ஓர் உத்தி.

electron gun : மின்னணுத் துப்பாக்கி : எலெக்ட்ரான்களின் ஒரு நுண்ணிய கற்றையை உண்டாக்குகிற சாதனம். இந்தக் கற்றை ஓர் எதிர்மின்கதிர்க் குழலில் பாஸ்வரத் திரைமீது விழச் செய்யப்படுகிறது.

electronic : மின்னணு சார்ந்த : சாதாரண கடத்திகள் மூலம் மின்சாரம் தாராளமாக ஓடு வதற்கு மாறாக அரைக்கடத்திகள், வால்வுகள், வடிகட்டிகளின் வழியாக மின்சாரம் ஓடுவது தொடர்பானது. மிகவேகமாக இயங்கும் மின்னணுப் பொத்தான்கள் மூலம் மின்சாரத்தை ஓடவோ அல்லது நிறுத்தவோ செய்யும் மின்னணுச் சாதனங்கள் தேர்வு முறையிலும் கூட்டாகவும் பயன்படுத்துவதில் தான் கணினி தொழில் நுட்பத்தின் சாராம்சமே உள்ளது.

electronic accounting machine (EAM) : மின்னணு கணக்கு வைப்புப் பொறி (இ. ஏ. எம்) : விசைத்துளை, எந்திரப் பிரிப்பி பட்டியலிடுவான் அல்லது சேர்ப்பி போன்ற பெருமளவில் மின் எந்திரத்தன்மையுள்ள கணக் கீட்டுக் கருவி.

electronically programmable : மின்னணு முறையில் நிரலாக்கத் தொடரமைக்கக் கூடிய : 'ப்ராம்' நிரலாக்கத் தொடர் அமைப்புக் கருவியைப் பயன்படுத்தி இருமைக் குறியீட்டு முறையில் 1, 0 வடிவங்களில் தரவுகளை மின்னணு முறையில் சேர்க்கக் கூடிய இலக்கமுறைச் சாதனம் அல்லது நிரலாக்கத் தொடர் அமைக்கும் ராம் பற்றியது.

electronic blockboard : மின்னணுக் கரும்பலகை.

electronic book : மின்னணு நூல்.

electronic bulletin board : மின்னணு செய்திப்பலகை : செய்திகளின் பட்டியலை வைத்திருக்கும் மின்னணு அமைப்பு. தங்களது கணினி அமைப்புகளில் இருந்து இந்தப் பல கையுடன் தொடர்பு கொண்டு செய்திகளை பெறமுடியும் அஞ்சல் செய்யமுடியும் அல்லது அங்கே இருக்கும் செய்திகளைப் படிக்க முடியும்.

electronic calculators : மின்னணுக் கணிப்பான்;மின்னணுக் கணிப்பிகள்.