பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/522

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

electrosensitive printer

521

electro tube


பரப்பில் மின்சக்தி ஓடுவதற்கு அச்சு முனை உதவுவதன் மூலம் அங்கு இருளடைந்து அச்சிடப் பட்டது தெளிவாகத் தெரிகின்றது.

electrosensitive printer : மின் உணர்வு அச்சுப்பொறி : சிறப்பாகத் தயாரிக்கப்பட்ட காகி தத்தில் மின்சக்தி மூலம் எழுத்துகள் அமைப் பதைப் பயன்படுத்துகின்ற அழுத்து முறை அல்லாத அச்சுப்பொறி.

electrostatic : மின் நிலைப்பு;நிலை மின்சாரம்  : ஒரு கடத்துப் பாதையில் மின்னூட்டம் பரவிச் செல்லாமல் நிலைத்து நிற்றல். இத்தகைய நிலை மின்னூட்டம் நகலெடுக்கும் கருவிகளிலும், லேசர் அச்சுப்பொறிகளிலும் - மைத் துகளை ஒளியு ணர்வு உருளையில் ஒட்டவைக்கப் பயன்படுகிறது. தட்டை வரைவு பொறிகளிலும் (Plotters) இது போலவே பயன்படுகிறது.

electrostatic discharge : நிலை மின்னிறக்கம்  : வெளி மூலத்திலிருந்து நிலைமின்சாரம் ஒரு மின்சுற்றுக்குள் மின்னிறக்கம் ஆகிவிடல். எடுத்துக் காட்டாக, ஓர் ஒருங்கிணைந்த மின்சுற்றுப் பலகையை (Integrated Circuit Board) நாம் கையால் தொடும் போது, நம் உடலிலுள்ள நிலை மின்சாரம் மின்னிறக்கமாகி, அம்மின்சுற்றினை பழுதாக்கி விடுவதுண்டு.

electrostatic plotter : நிலை மின்னியல் : வரைவி : மின்வாய்களின் ஒரு வரிசை மேற்செல்லும் போது மின்னேற்றமடைகிற ஒரு தனிவகைக் காகிதத்தைப் பயன்படுத்துகிற வரைவான். மின்னேற்றமடைந்த காகிதத்தில் உலர் மை பூசப்படுகிறது. இதில் உருமாதிரிகளில் கறுப்பு. வெள்ளையில் அல்லது வண்ணத்தில் அச்சடிக்கப்படுகின்றன. சில வரைவான்கள், 6 அடி வரை அகலமுள்ள காகிதத்தைப் பயன்படுத்து கின்றன.

electrostatic printer : நிலைமின் அச்சுப்பொறி : வேதியியல் முறையில் பதப்படுத்தப்பட்ட காகிதத்தில் எழுத்துகளை ஏற்படுத்துகின்ற அதிவேக அழுத்தமற்ற அச்சுப் பொறி.

electrothermal printer : மின் வெப்ப அச்சுப்பொறி : வெப்ப உணர் காகிதத்தில் சிறுபுள்ளிகள் வடிவால் எழுத்துகளை உருவாக்கும். வெப்பப் பொருள்களைப் பயன்படுத்தும் அதிவேக அச்சுப்பொறி.

electro tube : மின் குழாய் : மின்மப் பெருக்கிகள் உருவாக்கப்படுவதற்கு முன்பு கணினிகளில் பயன்படுத்தப்பட்டு வந்த முக்கிய மின்னணுப் பொருள்.