பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/523

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

element

522

elevator


element : உறுப்பு : ஒருவரிசை அல்லது சதுரத்தில் உள்ள தரவு வகை.

element, active : செயற்படு மூலகம்;செயற்படு உறுப்பு : செயற்படு தனிமம்.

element, AND : உம் உறுப்பு.

elementary diagram : தொடக்க நிலை வரைபடம் : ஒரு மின் அமைப்பின் கம்பியிழுக்கும் வரை படம். மின்சக்தி வரும் வழிகளை செங்குத்துக் கோடு களுக்கிடையில் குறிப்பிட்ட எல்லா சாதனங் களும் வரையப்படும். செய்தி, கம்பிக் கட்டமைப்பு, அளவைப் பொருள் போன்ற அனைத்தையும் உள் ளடக்கியது. CAD அமைப்பில் எளிதில் உருவாக்க முடியும்.

elementary item : தொடக்க நிலை உருப்படி.

elementary perciever and memories : தொடக்க உணர்வி மற்றும் நினைவுப் பதிப்பிகள் : எட் ஃபெய்கென்பாம் என்ற அமைவனம் 1960இல் உரு வாக்கிய செயற்கை நுண்ணறிவு (Al) கல்விப் பொறியமைவு.

elements of a microcomputer : ஒரு நுண்கணினியின் உறுப்புகள்'"' : நுண் செயலகம், நிரலாக்கத் தொடர் நினைவகம் (ரோம்), நிரலாக்கத் தொடர் மற்றும் தகவல் சேமிப்பகம் (ராம்), உள்ளீடு / வெளியீடு மின்சுற்று, மற்றும் நேரத்துடிப்பு உருவாக்கி ஆகியவற்றை உள்ள டக்கிய ஒரு நுண் கணினியின் பாகங்கள்.

elegant : நேர்த்தி;செம்மை : எளிமை, செறிவடக்கம், திறன், நயநுட்பம் அனைத்தும் சேர்ந் திருத்தல். கணினி அறிவியலின் கோட்பாட்டு அடிப்படையில் நேர்த்தியான வடிவமைப்புக்கே (நிரல்கள், நிரல்களுக்கு அடிப்படையிலான செயல்பாட்டு வரைவுகள், வன்பொருள் ஆகிய வற்றில்) முன்னுரிமை தரப்பட வேண்டும். ஆனால் கணினித் தொழிலின் வளர்ச்சி வேகத்தில் ஓர் உற்பத்திப் பொருளின் உருவாக்கத்தை விரைவு படுத்த வேண்டும் என்பதற்காக பெரும்பாலும் நேர்த்தியான வடிவமைப்பு புறக்கணிக்கப்பட்டு விடுகிறது. இதன் காரணமாய், திருத்துவதற்குக் கடினமான குறைபாடுகளை (bugs) அவை கொண்டுள்ளன.

elegant programme : நுட்பநய செயல் வரைவு : எளிய வடிவமைப்புடன் மிகக்குறைந்த அளவு நினைவாற்றலைப் பயன்படுத்தி, மிக வேகமாக இயங்கக் கூடிய செயல் வரைவு.

elevator : மேலேற்றி : கணினித் திரையில் ஓர் ஆவணத்தை