பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/527

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

embedded interface

526

e-money or emoney


அமைந்திருத்தல். அல்லது அந்த ஆவணத்திலுள்ள ஒரு பட உருவத்துடன் மீத்தொடுப்பு இணைந் திருக்கலாம்.

embedded interface : உட்பொதி இடைமுகம் : ஒரு வன்பொருள் சாதனத்தின் இயக்கி மற்றும் கட்டுப்பாட்டுப் பலகையிலேயே உள்ளிணைக்கப்பட்ட இடை முகம். இதனால் அச்சாதனத்தை கணினியின் முறைமைப் Linulcol-uilei (System Bus) நேரடி யாக இணைக்க முடியும்.

embedded object : உட்பொதி பொருள் : உள்ளிடப்பட்ட பொருள்.

embedded system : உள்ளிடப்பட்ட அமைவு : பதிக்கப்பெற்ற பொறியமைவு;உட்பொதிந்த அமைப்பு : ஒரு சாதனத்தைக் கட்டுப்படுத்துவதற் காகப் பயன்படுத்தப்படும் தனி வகைக் கணினி. உந்து ஊர்திகள், கருவிகள், வானூர்தி, விண் வெளிக் கலங்கள் ஆகியவற்றில் இது பெரு மளவில் பயன்படுத்தப்படுகிறது. செயற்பாட்டு முறை, பயன்பாட்டுச் செயற்பணிகள் ஆகியவற்றை ஒருங்கிணைக்கிற மென்பொருள்.

embedded version : உட்பொதி பதிப்பு.

embedding : உள்ளிடல் : உட்பொதித்தல் : உரைநடையின் உள்ளேயே நிரல்களாக சிறப்பு அச்சிடும் நிரல்களைச் சேர்த்தல்.

embedding styles : உட்பொதி பாணிகள்.

emboss : உந்துவி.

em dash : எம் டேஷ் : ஒரு சொற்றொடரின் முறிவை அல்லது குறிக்கீட்டைக் குறிக்கப் பயன்படும் நிறுத்தற்குறி (-). தட்டச்சு அளவீட்டில் அந்தக் கோட்டின் நீளம், சில எழுத்துருக்களில் M என்ற எழுத்தின் அகலத்துக்குச் சமமாக இருப்ப தால் இப்பெயர் பெற்றது.

emergency : அவசர நிலை.

emitter : உமிழி : ஒரு இணைப்பு மின்மப் பெருக்கியில் உள்ள எலெக்ட்ரோடு.

emitter, character : வரிவடிவ உமிழி;எழுத்துரு ஒளிர்வி.

emmitter coupled logic (ECL) : உமிழி பிணைப்புத் தருக்கம் : ஒளிர்வு இணைவுத் தருக்க முறை : இசிஎல் (ECL) என்பது Emmitter Coupled Logic' என்பதன் குறும்பெயர். அதிவேகக் கணினிகளில் பெரும்பாலும் பயன்படுத்தப்படும் ஒருவகைத் தருக்கமுறைச் சுற்று வழி.

e-money or emoney : மின் பணம் : மின்னணுப் பணம் என்பதன் சுருக்கம். இணையத்தில்