பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

add-on card

52

address decoder


add-on card : திறனேற்றி அட்டை : கூடுதல் அட்டை : கூட்டுறுப்பு அட்டை.

add record : ஏடு சேர்.

add/remove programmes : நிரல்கள் சேர்/அகற்று.

addresable : அழைதகு முகவரி.

address : முகவரி;முகவெண் : சேமிப்பில் ஒரு குறிப்பிட்ட இடத்தைக் குறிப்பிடுகிற அடையாள எண் அல்லது பெயர்.

addressable cursor : முகவரி இடஞ்சுட்டி;முகவரி இடப்படு காட்டி : திரையில் உள்ள எந்தக் கிடக்கை அல்லது நெடுக்கையையும் நகர்த்தக்கூடிய வகையில் நிரல் தொடர் அமைக்கப்பட்ட இடங்காட்டி.

address arithmatic : முகவெண் கணக்கீடு;முகவரிக் கணக்கீடு.

address bar : முகவரிப்பட்டை.

address, base : தள முகவெண், தள முகவரி;அடி முகவரி;தொடக்க முகவரி.

address book : முகவரி புத்தகம்;முகவரி சேமிப்பு நூல்;முகவரிக் கையேடு : ஒரு மின்னஞ்சல் மென்பொருளில், மின்னஞ்சல் முகவரிகளையும் அவர்களின் பெயர்களையும் கொண்ட பட்டியல். அடிக்கடி மின்னஞ்சல் அனுப்ப வேண்டியவர்களின் முகவரிகளைச் சேமித்து வைத்துக்கொள்ள முடியும். முதல் முறையாக அஞ்சல் அனுப்புபவரின் முகவரியையும் முகவரிப் புத்தகத்தில் சேமித்துக் கொள்ள முடியும். பட்டியலிலுள்ள ஒருவருக்கு அஞ்சல் அனுப்ப நினைக்கும்போது, முகவரிப் புத்தகத்திலிருந்து எடுத்துக் கொள்ளலாம்.

address buffer : முகவெண் தாங்கி, முகவரி இடையகம்.

address bus : முகவெண் பாட்டை : முகவெண் மின் இணைப்புத் தொகுதி : கணினிச் சாதனங்களில் குறிப்பாக நுண் செயலிகளில் ஒரு பகுதியில் இருந்து இன்னொரு பகுதிக்குத் தரவு ஏந்திச் செல்லப் பயன்படும் மின் இணைப்புத் தொகுதி, பாட்டை எனப்படுகிறது. இவற்றுள் நினைவக இருப்பிட முகவரிகளைக் குறிப்பிடும் சமிக்கைகளை ஏந்திச் செல்லும் பாட்டை, முகவரிப் பாட்டை எனப்படும். இது பெரும்பாலும் 20 முதல் 6 வரையிலான தனித்தனி தடங்களின் சேர்க்கையாக இருக்கும்.

address calculation : முகவெண் கணக்கீடு;முகவரிக் கணக்கீடு.

address decoder : முகவெண் கொணர்வி;முகவரி குறிவிலக்கி :