பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/536

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

enhanced parallel port

535

ΕΝΙΑC


உயர்த்திய விசைப் பலகை

உயர்த்திய விசைப் பலகை

மான/சறுக்குச்சட்ட விசை திண்டுக்கும் எழுத்துவிசை களுக்குமிடையில் விசைத் தொகுதி ஒன்று அமைந்திருக்கும். மேலும் f11, f12 என்ற இரு செயற்பணி விசைகள் கூடுதலாக இருக்கும்.

enhanced parallel port : மேம்பட்ட இணைநிலைத் துறை : அச்சுப்பொறி, புற வட்டியக்ககம், நாடா இயக்ககம் போன்ற புறச்சாதனங்களை இணைப் பதற்குப் பயன்படுத்தப்படும் ஒர் இணைப்புத்துறை. மேம்படுத்தப்பட்ட இணை நிலைத் துறைகள் விரைவான தரவு பரிமாற்றத்துக்கு மிகுவேக மின் சுற்றுகளைப் பயன்படுத்துகின்றன. தரவுத் தொடர்புக்கான கட்டுப்பாட்டுத் தடங்கள் ஒரு துண்மிக்கு ஒன்றாக உள்ளன. ஒரேநேரத்தில் அனைத்துத் தடங்களிலும் தரவு துண்மிகள் ஒன்றாகப் பயணம் செய்கின்றன.

enhanced serial port : மேம்பட்ட நேரியல் துறை : சுட்டி, புற இணக்கி போன்ற மிகுவாகப் பயன்படுத்தப்படும் புறச்சாதனங்களை இணைக்கப் பயன்படும் இணைப்புத் துறை. மேம்படுத்தப்பட்ட நேரியல் துறைகள் விரைவான தரவு பரிமாற்றத்துக்கு 16550-வகை அல்லது புதிய மிகுவேக யுஏஆர்டி மின் சுற்றுகளைப் பயன்படுத்துகின்றன. தரவு ஒவ்வொரு துண்மியாக ஓர் இணைக் கம்பியில் ஒரு திசையில் மட்டுமோ, இரு திசையிலுமோ பயணம் செய்கின்றன.

Enhanced Small Device Interface (ESDI) : மேம்பட்ட சிறுசாதன இடைமுகம்.

ENIAC : ஈனியாக் : :Electronic Numerical lntegrator and Calcu-