பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/546

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

escape code

545

ESD


எழுத்து. கட்டுப்பாட்டு எழுத்து. பெரும்பாலும் பிறகுறியீடுகளுடன் பயன்படுத்தப்படுகிறது.

escape code : விடுபடு முறை.

escape key : விடுபடு விசை : விடுபடு சாவி : கணினி விசைப் பலகையிலுள்ள ஒரு விசை, இதனை அழுத்தும்போது, குறிப்பிட்ட செய்தி குறியீடாகக் கணினிக்கு தெரிவிக்கப்படுகிறது. பெரும்பாலான பயன்பாட்டுத் தொகுப்புகளில் விடுபடு விசையை அழுத்தும் போது முந்தைய நிலைக்குத் திரும்பலாம். பட்டித் தேர்வுகளில் முந்தைய மெனுநிலைக்குத் திரும்பும். சிலவற்றில் நிரலைவிட்டு வெளியேறவும் இவ்விசை உதவும்.

escape sequence : விடுபடு குறித்தொடர்;இடர் பிழைப்பு வரிசை விடுபடு குறியை முன்னொட் டாகக் கொண்டு தொடரும் குறித்தொடர். பதின்ம எண் முறையில் விடுபடு விசையின் ஆஸ்க்கி மதிப்பு 27. பதினாறெண் முறையில் 18 ஆகும். இதனைத் தொடர்ந்து ஒன்று அல்லது இரண்டு குறிகள் அமையும். ஓர் ஆவணத்தில் உரையின் நடுவே விடுபடு குறித்தொடர் அமைந்திருப்பின் கணினியானது அதனைச் சாதாரண உரையாக எடுத்துக் கொள்ளாமல், கட்டளையாகக் கருதி அதனை நிறைவேற்றும். அக்கட்டளை ஒரு சாதனம் சார்ந்த அல்லது நிரலுக்குரியதாக இருக்கலாம். (எ-டு) ;சி-மொழியில், printf ("One tтwo") ;என்ற கட்டளை, one two என்று இரு சொற்களுக் கிடையே நிறைய இடம் விட்டுக் காட்டும். printf ("One\nTwo") ; என்ற கட்டளை, one two என்று அடுத்தடுத்த வரியில் காட்டும். இங்கே, \t, \n என்ற குறியீடுகள் விடுபடு குறித்தொடர் ஆகும்.

ESC Character : விடுபடு எழுத்து : விடுபடு குறி : ஆஸ்கி குறித்தொகுதியில் அமைந்துள்ள 32 கட்டுப்பாட்டுக் குறிகளுள் ஒன்று. இது பெரும் பாலும் விடுபடு குறித்தொடரில் முதல் குறியாக அமையும். அச்சுப்பொறி போன்ற சாதனத்துக்குக் கட்டளை தரும் குறித்தொடராக அமைந்த சரமாக இருக்கலாம். கணினி, விடு படு குறியின் மதிப்பை 27 அல்லது 1B என்றே எடுத்துக் கொள்ளும்.

ESD : இஎஸ்டி : 1. நிலை மின்னியல் போக்கு. ஒரு மின்னேற்றம் செய்யப்பட்ட பொருளிலிருந்து ஓர் அணுகு மின்கடத்து பொருளுக்குத் தாவு


35