பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/547

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ESDI

546

ESS


கிற சுடர் (எலெக்ட்ரான்கள்) 2. மின்னணுவியல் மென்பொருள் பகிர்மானம். மென்பொருள்களை ஓர் இணையத்தின் வாயிலாக சேரவேண்டிய எந்திரங் களுக்கு அனுப்புவதன் மூலம் மென்பொருள்களை நிறுவுதல்.

ESD : எஸ்டி : இஎஸ்டிஐ : உயர்த்திய சிறுசாதன இடை முகப்பு : மேம்படுத்திய சிறுசாதன இடை முகப்பு என்று பொருள்படும் Enhanced Small Device Interface என்ற தொடரின் தலைப் பெழுத்துக் குறும்பெயர். வட்டுகள் கணினியுடன் அதி வேகத்தில் தகவல் பரிமாறிக்கொள்ள உதவும் ஒரு சாதனம். எஸ்டி இயக்கம் வினாடிக்கு 10 மெகா பைட்டு அளவில் தகவல் பரிமாற்றம் செய்யும். இந்த வேகத்தை இருமடங்காக்கும் திறனும் இவற்றுக்கு உண்டு.

ESF : இஎஸ்எஃப் : 1. (விரி வாக்கிய மீச்சட்டகம்) : இயல்பான செயற்பாட்டின்போது ஒரு இணைப்பினை கண்காணிக்க அனுமதிக்கிற உயர்த்திய T1 உருவமைவு. 2. (புறநிலை ஆதார உருவமைவு) : IBM இன் CSP/AD பயனிட்டு உருவாக்கியில் வரை யறுக்கப்படுவதற்கான தனிக் குறியீட்டு மொழி.

ESP : இஎஸ்பி : 1. (E டெக் விரைவு மரபுக்குறிப்பு) : Eடெக் ஆராய்ச்சி நிறுவனத்தின் அதிர்விணக்க மற்றும் அதிர்விணக்க நீக்கிகளில் பயன்படுத்தப்படும் வணிக உரிமையுடைய மரபுக் குறிப்பு. 2. (மின்னணுவியல் இயங்கா ஒளிப்படக் கலை) தொலைபேசி இணைப்பில் உருக்காட்சி களை இலக்கமாக்கி அனுப்புதல். 3. எமுலெக்ஸ் SCSI செய்முறைப்படுத்தி. எமுலக்ஸ் SCSI வட்டுக் கட்டுப் பாட்டுக் கருவியில் பயன்படுத்தப்படும் வணிக உரிமையுடைய சிப்பு.

ESP IEEE standard : இஎஸ்பீ ஐஇஇஇ செந்தரம் : Encapsulating Security Payload IEEE Standard என்பதன் சுருக்கம். இணைய நெறி முறையான ஐபி (Internet Protocol) மூலம் அனுப்பப்படும் செய்தியின் நம்பகத்தன்மை மற்றும் இரகசியத்தன்மையைப் பாதுகாப்பதற்கான தரக் கட்டுப்பாடு. சில சூழ்நிலைகளில் ஐபீ தரவு செய்திக்கு சான்றுறுதி வழங்குவதாகவும் அமையும்.

ESS : இஎஸ்எஸ் : மின்னணுவியல் விசைப் பொறியமைவு. : ஒரு மைய அலுவலகத்தில் தொலைபேசி உரையாடல்களுக்குக் கம்பி யிணைப்புக் கொடுப்பதற்குப் பயன்படுத்தப்படும் பேரளவுக் கணினி.