பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/549

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

evelyn wood dynamic reader

548

event-driven processing


அமைப்பு எதற்காக வடிவமைக் கப்பட்டதோ அதை உண்மையிலேயே செய்கிறதா என்பதைக் கண்டறியும் செயல்முறை.

evelyn wood dynamic reader : ஈவ்லின் உட் இயக்கப் படிப்பி : 'கமோ டோர்-64'என்ற வீட்டுக் கணினியில் படிப்புச் செறிவு மற்றும் இருத்தி வைப்புத் திறனை மேம்படுத்துவதற்காகப் பயன்படும் ஒரு மென்பொருள்.

even parity check : இரட்டைப் படை சரிபார்ப்பு : இலக்க முறைத் தகவல் தொடர்பில், துண்மி எண்ணிக்கையில் இரட்டைப்படை சரிபார்க்கும் முறை.

event : நிகழ்வு : எந்த ஒரு நடப்பு அல்லது நிகழ்ச்சியையும் குறிப்பிடும் மைல்கல் முனை என்றும் அழைக்கப்படும். கால எல்லை எதுவும் இல்லை. நடவடிக்கைகளை தொடங்குதல் அல்லது முடித்தல் மற்றும் ஒன்றுடன் ஒன்றாக அவை தொடர்புபடுத்தலை இது குறிப்பிடுகிறது.

event driven : நிகழ்வு இயக்கம் : பயனாளரின் உட்பாட்டுக்கு அல்லது ஒழுங்குபடுத்தப்படாத நேரங்களில் பிற பயன்பாட்டுக்குப் பதிலளிக்கிற பயன்பாடு. இது பயனாளரின் தெளிவுகளினால் இயங்குகிறது. (தெரிந் தெடுத்த பட்டியல்;அழுத்தும் பொத்தான்முதலியன).

event-driven environment;நிகழ்வுத் தூண்டல் சூழல்.

event-driven language : நிகழ்வுத் தூண்டல் மொழி.

event driven programme : நிகழ்வுத் தூண்டல் நிரல்.

event-handler : நிகழ்வுக் கையாளி.

event-driven processing : நிகழ்வுத் தூண்டல் செயலாக்கம் : ஆப்பிள் மெக்கின்டோஷ், மைக்ரோ சாஃப்ட் விண்டோஸ், யூனிக்ஸ், ஒஎஸ்/2 போன்ற மிகவும் மேம்பட்ட இயக்க முறைமைக் கட்டமைப்புகளில் இடம் பெற்றுள்ள ஒரு நிரல் பண்பு. நிகழ்வுகள் பல்வேறு வகைப்பட்டவை. சுட்டியின் ஒரு பொத்தானை சொடுக்குவது, விசைப்பலகையில் ஒரு விசையை அழுத்து

வது, வட்டினைச் செருகுவது, ஒரு சாளரத்தின் மீது சொடுக்குவது இவை யெல்லாம் நிகழ்வுகளே. தொடர்ந்து ஏற்படும் நிகழ்வுகள் வரிசையாக அமைகின்றன. நிரலானது ஒவ்வொரு நிகழ்வாக ஏற்று, அதற்கேற்ப செயல்படும். சில வேளைகளில் சில நிகழ்வுகள் முன்னுரிமையுள்ள இன் னொரு நிகழ்வைத் தூண்டலாம்.