பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/560

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

extended edition

559

extended partition


extended edition : நீட்டித்த பதிப்பு : உள்ளிணைந்த தரவுத் தளம், தரவுத் தொடர்பு வசதிகள் கொண்ட ஒஎஸ்/2 இயக்க முறையின் பதிப்பு. ஐபிஎம் உருவாக்கியது.

Extended Graphics Array : நீட்டித்த வரைகலைக் கோவை : 1990ஆம் ஆண்டில் ஐபிஎம் நிறுவனம் அறிமுகப்படுத்திய, வரைகலைக் கட்டுப்படுத்தி மற்றும் திரைக்காட்சிமுறை வடிவமைப்புக்கான உயர்நிலை செந்தரம். இதன்படி 640x480 படப் புள்ளித் தெளிவு, 65, 536 வண்ணங்கள் பெறலாம். அல்லது 1, 024x768 தெளிவும் 256 வண்ணங்களும் பெறலாம். பெரும்பாலும் பணி நிலையக் (work station) கணினிகளில் பயன்படுகின்றன.

extended maintenance : நீட்டிப்புப்படுத்திய பேணுகை : அடிப்படைப் பேணுகைக் கால அளவுக்குக் கூடுதலான கால அளவுகளுக்கு வேண்டப்படும் நேரடி அழைப்புப் பணியம்.

extended memory : நீட்டிப்பு நினைவகம் : 1 MB-க்கு மேற் பட்ட நினைவகம். இதனை 24 மற்றும் 32 துண்மி நுண் செய் முறைப்படுத்திகளினால் அணுகலாம். இன்டெல் - 286-களுக்கும் அதற்கு மேற்பட்டும், ஒரு மீமிகு எட்டியலுக்கு மேற்பட்ட செந்நிற நினைவகம். RAM வட்டுகளுக்கும், வட்டுப் பொதிவுகளுக்கும், DOS விரிவாக்கிகளைப் பயன் படுத்தும் பயன்பாடுகளுக்கும் இது உதவுகிறது.

extended memory specification : நீட்டித்த நினைவக வரன்முறை (இஎம்எஸ்) : லோட்டஸ், இன்டெல், மைக்ரோசாஃப்ட், ஏஎஸ்டி ஆய்வக நிறுவ னங்கள் இணைந்து உருவாக்கியது. எம்எஸ்டாஸ் இயக்க முறைமை பயன்படுத்திக் கொள்ளாத நினைவகப் பரப்புகளையும், 1எம்பிக்கு அதிகமான நீட்டித்த நினைவகத்தையும் இயல்புநிலைப் பயன் பாட்டுத் தொகுப்புகள் பயன்படுத்திக் கொள்வதற் கான மென்பொருள் இடை முகம். நீட்டித்த நினை வக மேலாளர் (Extended Memory Manager) என்னும் சாதன இயக்கி நிரல் நினைவகத்தை மேலாண்மை செய்யும். தேவையானபோது இதனை நிறுவிக் கொள்ளலாம். குறிப்பிட்ட பயன்பாட்டுத் தொகுப்பு, இயக்கி நிரல் மூலமாக கூடுதல் நினைவகப் பகுதியை அணுகிக் கொள்ளும்.

extended partition : நீட்டிப்பு;பிரிவினை : தனியொரு இயற்