பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/570

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

fast-access storage

569

fast/wise SCSI


fast-access storage : விரைவு அணுகு சேமிப்பகம்.

fastCAD : ஃபாஸ்ட் கேட் : நன்கு வடிவமைக்கப்பட்ட பயனாளர் இடை முகப்பு தயாரிப்பில் புகழ்பெற்ற'எவலூஷன் கம்ப்யூட்டர்ஸ்'என்ற அமைவனம் தயாரிக்கும் முழு அம்சங்களையும் கொண்ட PC CAD செயல் முறை. இதற்கு ஒரு கணித இணைச் செய்முறைப்படுத்தி தேவை.

fast core : விரைவு உள்மையம் : ஒரே செய்முறைப்படுத்தியில் செயல்முறைச் சேமிப்பகத்துக்குப் பயன்படுத்தப்படும் சாதனங்களைவிடக் குறைந்த அணுகுநேரம் கொண்ட ஒரு வகை உள்மையச் சேமிப்பகம்.

fast farward : வேகமாய் முன் நகர்.

fast fourier transform : விரைவு"ஃபூரியர்" உருமாற்றி : சிக்கலான குறியீடுகளை அடிப்படை அமைப்பான்களாகப் பகுக்கக் குறியீட்டுச் செய்முறைப்படுத்துதலில் பயன்படுத்தப்படும் ஒரு படிநிலை நடைமுறை.

fast line : விரைவு அனுப்பீட்டுத் தொடர்பு : தரவுகளை அனுப்பீடு செய்யும் வீதம் பெரும்பாலும்'பாட்' (Baud) என்ற அலகுகளில் குறிப்பிடப் படுகிறது. 'பிரஸ்டெல்'முறையில் பயன்படுத்து பவருக்கு 1, 200 பாட் வேகத்தில் அனுப்பீடு செய்யப்படுகிறது. ஆனால், தொலைபேசித் தொடர்புகளில் அதைவிட அதிகவேகத்தில் தரவுகள் இழக்கப்படுகின்றன. 'பிரிட்டிஷ் டெலிகாம்'என்ற அமைவனம் தயாரித்துள்ள தனி வகை நேரடித் தொடர்புகள், தரவுகளை 48, 000 அல்லது 96, 000 பாட் வேகத்தில் அனுப்ப வல்லவை. இவை விரைவு அனுப்பீட்டுத் தொடர்புகள் என அழைக் கப்படுகின்றன.

fast SCSI : வேக ஸ்கஸ்ஸி : ஸ்கஸ்ஸி-2 இடைமுகத்தில் ஒரு வகை. ஒரே நேரத்தில் எட்டு துண்மி (பிட்) களைப் பரிமாற்றம் செய்யும். வினாடிக்கு 10 மெகா துண்மி (மெகா பிட்) கள் வரை தரவு பரிமாற்றம் இயலும். வேக ஸ்கஸ்ஸி இணைப்பி 50 பின்களைக் கொண்டது.

fastwise SCSI : வேக/விவேக ஸ்கஸ்ஸி : ஸ்கஸ்ஸி-2 இடை முகத்தில் ஒருவகை. ஒரே நேரத்தில் 16துண்மி (பிட்) தரவுவைக் கையாள வல்லது. வினாடிக்கு 20 மெகா துண்மிகள்வரை தரவு பரிமாற்றம் இயலும். வேக/விவேக ஸ்கஸ்ஸி இணைப்பி 68 பின்களைக் கொண்டது.