பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/571

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

FAT

570

FAT file system


FAT ஃபேட் : "கோப்பு ஒதுக்கீட்டு அட்டவணை என்று பொருள்படும் "File Allocation Table" என்பதன் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.

fatal error : முடிவான பிழை : ஒரு நிரலாக்கத்தொடர் இயக்கப் படும்போது ஏற்படும் எதிர்பாராத பழுது அல்லது பிற சிக்கல்களினால் கணினியானது தொடர்ந்து செயல்பட முடியாமல் போவது. முடிவான பிழை இல்லை எனில் சரியான முறையில் இல்லையென்றாலும் நிரலாக்கத் தொடர் சென்று கொண்டிருக்கும். நிரலாக்கத்தொடர் நின்றுபோகுமாறு செய்கின்ற ஒரு இயக்காளரின் தவறு அல்லது 'ராம்" நினைவகத்தில் சேமிக்கப்பட்டுள்ள தரவுகள் அழிந்து போதல் போன்றவை முடிவான பிழைகளாகும் . Terminal Error என்றும் அழைக்கப்படுகிறது.

fat application : ஃ பேட் பயன்பாடு : பவர்பீசி பிராசசர் பொருத்தப்பட்ட மெக்கின்டோஷ், 68000 பிராசசர் பொருத்தப்பட்ட மெக்கின்டோஷ் ஆகிய இரு வகைக் கணினிகளிலும் செயல் படுத்தக்கூடிய ஒரு பயன்பாடு.

fat binary : ஃபேட் இருமம் : பவர்பீசி பிராசசர் அடிப்படையிலான மெக்கின்டோஷ், 68000 பிராசசர் அடிப்படையிலான மெக்கின்டோஷ் ஆகிய இருவகைக் கணினியிலும் செயல்படக்கூடிய ஒருவகை பயன் பாட்டு வடிவாக்கம்.

tatbits : பருமனான துண்மிகள் : தனிப்பட்ட திரை உறுப்புகளை மாற்றும் வகையில் திரையின் ஒரு பகுதியைப் பெரிதாக ஆக்குகிறது. வண்ணமிடும் ஒவிய நிரலாக்கத்தொடரின் தேர்ந்தெடுக்கும் முறை. எழுத்து அமைப்பு உருவாக்குவதில் பயனுள்ளது.

fat client : கொழுத்த கிளையன் : ஒருவகை கிளையன்/வழங்கன் கட்டமைப்பில் செயல்படும் கிளையன் கணினி. இவ்வகை அமைப்பில் பெரும்பாலான அல்லது அனைத்துச் செயலாக்கங்களையும் கிளையன் கணினியே செய்து கொள்ளும். வழங்கன் கணினி மிகச் சிலவற்றைச் செய்யும் அல்லது எதையுமே செய்யாது. தகவலை வெளியிடும் பணியையும், செயல்கூறுகளையும் கிளையன் கணினியே கவனித்துக் கொள்ளும். வழங்கன் கணினி, தரவு தளத்தை மற்றும் அதனை அணுகுதல் போன்ற பணிகளைக் கவனித்துக் கொள்ளும்.

FAT file system : ஃபேட் கோப்பு முறைமை : கோப்புகளை ஒழுங்குபடுத்தி மேலாண்மை