பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/580

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ferromagnetic

579

fiber channel


ferromagnetic : அயக்காந்தம் : அயம், நிக்கல் போன்ற ஒரு பொருள். மிக உயர்ந்த காந்த மேற்பரப்புத் திறன்.

ferromagnetic material இரும்புக் காந்த ஆக்கப் பொருள் : நேர்காந்த ஆக்கப் பொருள் : மிகுகாந்தப் பண்பு பெறக்கூடிய பொருள். மின்னணுத் துறையில் பரவலாகப் பயன்படுத்தக்கூடிய பொருள். எஃகு மற்றும் தூளாக்கப்பட்ட இரும்பு ஆகியவை. மின்தூண்டி (Inductor) களின், தூண்டல் திறனை அதிகரிக்க, அவற்றின் சுருள் மையமாய்ப் பயன்படுகிறது. நெகிழ்வட்டு, நிலைவட்டு மட்டும் காந்த நாடாக்களில் மேல்பூச்சுக்குப் பயன்படுகிறது.

ferrous oxide ஃபெர்ரஸ் ஆக்சைடு : பதிவு செய்யும் வட்டுகள் மற்றும் நாடாக்களுக்கு பூசும் பொருள். இதை மின்காந்தப்படுத்த முடிவதால், மின்காந்த முறையில் தரவுப் பதிவு செய்ய முடிகிறது.

FET : எஃப்இடீ : Field Effect Transistor என்பதன் குறும்பெயர்.

fetch : கொண்டு வா, கொணர், எடு : ஒரு சேமிப்பகத்திலிருந்து நிரல் அல்லது தரவுகளைக் கண்டுபிடித்து ஏற்றுதல்.

fetch cycle : கொணர் சுற்று.

fetcher daemon : நேர்த்திச் செயல்முறை : முதன்மைச் செயல் முறையிலிருந்து வேண்டு கோள்களைக் கேட்டறிந்து, பிறகு முதன்மைச் செயல்முறையின் சார்பாக ஒரு வேண்டுகோளை விடுக்கிற ஒரு பெரிய செயல்முறையின் பகுதியாக இருக்கிற ஒரு சிறிய செயல்முறை. இந்தச் செயல்முறைகள் சிறிதாக இருப்பதால் இவற்றை மிகநேர்த்தியாகத் தனிப்பண்புடையதாக்கி, மிகத் திறம் படச் செயல்புரியும்படி செய்யலாம்.

fetch instruction : கொணர் ஆணை .

FF : எஃப்எஃப் : Form Feed என்பதன் குறும்பெயர்.

. fi : எஃப்ஐ : இணையத்தில் ஃபின்லாந்து நாட்டைச் சேர்ந்த இணையதளம் என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக்களப்பெயர்.

fiber channel : ஒளியிழைத்தடம் : அதி வேகமாகச் செயற்படும் கணினிக்காக உருவாக்கப்பட்டு வரும் எதிர்கால ANSI செந்தரம் (தர அளவு). இதில், IPI, SCSI. HIPPI நிரல் தொகுதிகள் இணைக்கப்பட்டுள்ளன. இதன் வேகம் வினாடிக்கு 12. 5 முதல் 100 MBytes வரை இருக்கும்.