பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/582

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

field delimitter

581

field programmable logic


யீடுகளுக்கு இடைப்பட்ட ஏற்பாடாக அமெரிக்க இராணுவம் தரவு செயல்பாடுகளில் பயன்படுத்தும் சரிசெய் குறியீடு.

field delimitter : புல வரம்புக்குறி.

field effect transistor (FET) : புல விளைவி மின்மப் பெருக்கி : மாறிலி சக்தியேற்கும் சேமிப்புப் பொருளாகச் செயல்படும் இறுதிப்பகுதி அரைக்கடத்திச் சாதனம்.

field emmission : புல அனுப்புதல்; புல வீச்சு, புல உமிழ்வு : வலுவான மின்சாரப் புலத்தின் தாக்கத்தினால் ஒரு உலோகம் அல்லது அரைக் கடத்தியிலிருந்து எலெக்ட்ரான்களை வெற்றிடத்திற்கு அனுப்புதல்.

field engineer : களப் பொறியாளர் : கணினி வன்பொருள் மற்றும் மென்பொருளின் களப் பராமரிப்புக்குப் பொறுப்பேற்றுள்ள தனிநபர். வாடிக்கையாளரின் பராமரிப்பு பொறியாளர் என்றும் அழைக்கப்படுவார்.

field list : புலப் பட்டியல்.

field menu : புலப் பட்டி.

field name : புலப்பெயர் : ஒரு புலத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள பெயர். (பெயர், முகவரி, நகரம், மாநிலம் முதலியன). இது எல்லாப் பதிவேடுகளிலும் ஒரே மாதிரியாக இருக்கும். இது புலத்தை அடையாளங்காட்டக் கூடியதேயன்றி, அதில் பதிவு செய்யப்பட்டுள்ள தரவுவை அடையாளங்காட்டக் கூடியதன்று.

field of view : புலப்பார்வை ; காட்சிப் புலம் : கணினி வரை கலைகளில், உருவாக்கப்பட்ட ஒளிப்படக் கருவி பார்க்கும் திறனின் எல்லைகளைக் குறிப்பிடுகிறது. ஒளிப்படக் கருவியை மையமாகக் கொண்ட கிடைமட்டக் கோணத்தையே இது பெரும்பாலும் குறிப்பிடுகிறது. கணிப்புக்கு எளிமையாக்க, கணினி வரைகலையாளர்களின் அனுமானத்தின்படி, ஒளிப் படக்கருவி ஒரு பிரமிட்டிற்குள் உள்ளது; கூம்புக்குள் அல்ல.

field programmable logic array : புல நிரலாக்க தருக்கக் கோவை : ஒரு வகையான ஒருங்கிணை மின்சுற்று (IC). இதில் தருக்க மின்சுற்றுகளின் (logic circuits) கோவை இருக்கும். தனித்த மின்சுற்றுகளிடையே இணைப்புகளையும், அதன்மூலமாக கோவையின் தருக்கச் செயல்முறைகளையும் நம் விருப்பப்படி நிரலாக்கம் செய்யமுடியும், தயாரிப்புக்குப் பிறகு, குறிப்பாக அவற்றைக் கணினிகளில்