பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/584

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

file access time

583

file compression


file access time : கோப்பு அணுகல் நேரம் : ஒரு கோப்பினைத் திறந்து தரவுவைப் படிக்கத் தொடங்குவதற்கு கணினி எடுத்துக் கொள்ளும் நேரம்.

File Allocation Table (FAT) : கோப்பு ஒதுக்கீட்டு அட்டவணை : ஒரு வட்டிலுள்ள தரவுகளின் பதிவேடு. இதன் மூலம் ஒவ்வொரு கோப்பின் உள்ளடக்கங்களையும் அணுகலாம். ஒரு செருகு வட்டில் அல்லது நிலைவட்டில் உள்ள ஒரு தரவுக் கோப்பு, அதில் எழுதப்பட்டுள்ள ஒவ்வொரு கோப்பின் அமைவிடம் பற்றிய தரவுகளைக் கொண்டிருக்கும். இது, ஒவ்வொரு கோப்பினையும் தேவைப்படும்போது கண்டறிந்து படிப்பதற்கு உதவுகிறது. இந்த அட்டவணை பெரும்பாலும் இருமடியாகச் சேமித்து வைக்கப்பட்டிருக்கும்.

file and record locking : கோப்பு மற்றும் பதிவேட்டுப் பூட்டு : பயனாளர் பன்முகச் சூழலில் தரவு மேலாண்மை செய்வதற்கான உத்திகள். தரவு, வாசகம், அல்லது உருக்காட்சிக் கோப்பினை ஒருவர் அணுகுவதை இந்தக் கோப்புப் பூட்டு தடுக்கிறது. ஒரு தரவுக் கோப்பினுள் தனியொரு பதிவேட்டினை அணுகுவதைப் பதிவேட்டுப் பூட்டு தடுக்கிறது.

file, archived : காப்பகக் கோப்பு .

file attachment : கோப்பு உடன் இணைப்பு.

file attribute : கோப்புப் பண்பியல்பு : ஒரு DOS கோப்பின் பண்பியல்புகள் தொடர்பான தரவுகள். எடுத்துக்காட்டாக, அது மறைந்துள்ளதா, படிப்பதற்கு மட்டுமேயானதா, எழுதுவதற்கு மட்டுமேயானதா என்ற விவரங்கள். ஒரு கோப்பினைப் பாதுகாப்பாகக் கையாள்வதற்கு அனுமதிக்கிற கோப்பு அணுகு வகைப்பாடு. முக்கிய பண்பியல்புகள்;எழுதப் படிப்பதற்குரியது; படிப்பதற்கு மட்டுமே உரியது; மறைவானது.

file backup : கோப்பு மாற்று ஏற்பாடு; மாற்றுக் கோப்புப்படி : கோப்புக் காப்பு : அழிக்கப்பட்ட அல்லது சேதமாக்கப்பட்ட தரவுத் தளம் ஒன்றை மீண்டும் கொண்டு வரப் பயன்படுத்தப்படும் தரவுக் கோப்புகளின் படிகள்.

file codes : கோப்புக் குறி முறைகள் .

file collection : கோப்புத் திரட்டு.

file compression : கோப்புச் சுருக்கம் : கோப்பு அழுத்தம்;