பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/587

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

fiie librarian

586

file maintenance


கேள்விகளுக்கோ அல்லது நிரலாக்கத் தொடர்களுக்கோ தரவு பயன்பாடுகளின் சிறந்த செயல்பாடுகள் தரவு அமைப்புகளை வரையறுப்பதற்கான மாதிரி அமைப்பு.

file librarian : கோப்பு நூலகர் : அனைத்துக் கணினிக் கோப்புகளையும் பாதுகாப்பாக வைத்திருப்பதற்குப் பொறுப்பேற்கும் நபர். வட்டுத் தொகுதிகளில் நிரலாக்கத் தொடர் தரவுக் கோப்புகள், மின்காந்த நாடாக்கள், துளையிட்ட அட்டைகள், நுண்திரைப்படங்கள் போன்றவை இவரது பொறுப்பில் அடங்கும்.

file locking : கோப்புப் பூட்டல்.

File Maker II : கோப்பு உருவாக்கி II : க்ளோரிஸ் என்ற அமைவனம் உருவாக்கியுள்ள மெக்கின்டோஷ் கோப்பு மேலாளர். இது பொதுவான தரவு மேலாண்மைக்குப் புகழ் பெற்ற ஒரு செயல்முறை. இது பல்வேறு புள்ளியியல் செயற் பணிகளையும், விரைவுத் தேடுதல் திறம்பாடுகளையும், விரிவான செய்தியறிவிப்பு அம்சங்களையும் அளிக்கிறது.

file man : கோப்பாளர் : விண்டோவின் 'கோப்பு மேலாளர்' என்று பொருள்படும் File Manager என்பதற்கான கொச்சை வழக்குச் சொல். இது பொது எல்லை MUMPS மென்பொருள். MUMPS செயல்முறையாளருக்கான பல்வேறு பயனீடுகளின் ஒரு தொகுதியை உடையது.

file management : கோப்பு மேலாண்மை.

file management system (FMS) : கோப்பு மேலாண்மைப் பொறியமைவு : தரவுகளை வரையறை செய்து, இந்த இனங்களைக் குறிப்பிட்ட பதிவேடுகளில் வைக்கவும், இந்தப் பதிவேடுகளை குறிப்பிட்ட கோப்புகளாக ஒருங்கிணைத்து, அவற்றைக் கையாளவும், பல்வேறு வழிகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ள தரவுகளை மீட்கவும் பயன்படுகிற ஒரு மென் பொருள் தொகுதி.

file manager : கோப்பு மேலாளர் : எளிய கோப்புகள் மற்றும் பொருளடக்கங்களைப் பயன்படுத்தும் எளிய தரவுத் தள மேலாண்மை நிரலாக்கத் தொடர். தரவுத் தள மேலாண்மை அமைப்பின் தம்பி அல்லது பதிவேடு மேலாளர் என்றும் அழைக்கப்படுவதுண்டு.

file maintenance : கோப்புப் பேணுகை, கோப்புப் பேணல் : கோப்புகளில் ஆவணங்களை