பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/588

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

file marker, end of

587

file protection


நாளது தேதி வரையில் புதுப் பித்தும், துல்லியமாகவும் பேணிவருவதற்கான நடவடிக்கைகளின் ஒட்டுமொத்தம். முதன்மைக் கோப்புகளைக் காலாந்திரங்களில் நாளது தேதி வரையில் புதுப்பித்தல். வட்டு இயக்கிகளைக் காலாந்திரங்களில் சீரமைவு செய்தல்.

file marker, end of : கோப்பு முடிவுக் குறி.

file, mufti-reel : பல்சுருள் கோப்பு.

filename : கோப்புப் பெயர் : ஒரு குறிப்பிட்ட கோப்பை அடையாளம் காண உதவும் அகர வரிசை எண் முறை எழுத்துகள்.

file name extension : கோப்புப் பெயர் விரிவாக்கம்; கோப்புப் பெயர் நீட்டம்; கோப்புத் துணைப் பெயர்; கோப்பு இனப் பெயர் : ஒரு கோப்புப் பெயரின் இரண்டாவது பகுதியாக அமையும் குறியீடு. ஒரு புள்ளியின் மூலம் கோப்பின் பெயரில் இருந்து பிரிக்கப்படுகிறது. கோப்பில் எத்தகைய தரவுகள் உள்ளன என்பதைக் குறிப்பிடுகிறது.

file open : கோப்புத் திறப்பு.

file organization : கோப்பு ஒருங்கமைத்தல்; கோப்பு அமைத்தல்; கோப்புத் தொகுப்பு : பயன்பாட்டு நிரலாக்கத் தொடர் அமைப்பவர் தரவுகளைப் பார்க்கும் முறை.

file pointer : கோப்புச் சுட்டு : DOS திறக்கிற கோப்பு ஒவ்வொன்றுக்கும் அது வைத்து வருகிற ஒரு மாறியல் மதிப்புரு. இந்தக் கோப்புச் சுட்டு, கோப்பில் படிப்பு/எழுத்து செயற்பாடு தொடங்குகிற அமைவிடத்தைச் சுட்டிக்காட்டுகிறது.

file processing : கோப்புச் செயல்பாடு; கோப்பு அலசல் : அடிப்படைக் கோப்புகளில் நடப்புத் தரவுகளின் மாற்றங்களுக்கேற்ப காலமுறைப்படி புதுப்பித்தல். அடிப்படை இருப்பு எடுப்புக் கோப்பில் மாதாந்திர இருப்பு எடுப்புக்கோப்பிலிருந்து மாற்றம் செய்தல் போன்ற பரிமாற்ற தரவுகளைக் கொண்டதாக இவை அமைந்திருக்கும். File Maintenence-க்கு எதிர்ச்சொல்.

file protection : கோப்புக் காப்பு; கோப்புப் பாதுகாப்பு : ஒரு கோப்பிலிருந்து எதிர்பாராத விதமாக தரவு அழிக்கப்படுவதைத் தடுக்கும் சாதனம் அல்லது தொழில்நுட்பம். மின் காந்த நாடா கோப்பு பராமரிப்பு வளையம் அல்லது செருகு வட்டினைப் பாதுகாக்க அதன் மேல் ஒட்டப்படும் பகுதி.