பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/591

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

file system

590

fill character


file system : கோப்பு முறை ; கோப்பமைவு முறை : ஒரு கணினிப் பொறியமைவில் கோப்புகளைப் பட்டியலிடும் முறை. தனித்தனிக்கோப்புகளை மேலாண்மை செய்கிற தரவு செய்முறைப்படுத்தும் பயன்பாடு. இதில் பழக்கப்பட்ட செயல்முறைப்படுத்துதல் மூலம் கோப்புகள் தொடர்புபடுத்தப்படுகின்றன. இது, தொடர்முறைச் செய்தித் தரவு தளத்திலிருந்து (Relational Database) வேறுபட்டது.

file transfer : கோப்பு மாற்றல்; கோப்புப் பெயர்வு : ஒரு இடத்திலிருந்து வேறோர் இடத்திற்கோ அல்லது ஒரு சேமிப்பு ஊடகத்திலிருந்து வேறொன்றுக்கோ கோப்பினை மாற்றுதல்.

File Transfer Access and Management (FTAM) : கோப்புப் பரிமாற்ற அணுகலும் மேலாண்மையும்.

file transfer protocol : கோப்புப் பெயர்வு வரைமுறை; கோப்புப் பரிமாற்று வரைமுறை.

file type : கோப்பு வகை : ஒரு கோப்பின் செயல்பாட்டு அல்லது கட்டமைப்புப் பண்புக்கூறுகளின் அடிப்படையில் கோப்பு வகைகள் அமைகின்றன. பெரும்பாலும் ஒரு கோப்பின் வகை அதன் பெயரைக்கொண்டே அடையாளம் காணப்படுகிறது. எம்எஸ்டாஸில் கோப்பின் வகைப்பெயர் (Extension) கோப்பின் வகையை அடையாளம் காட்டும். (எ-டு) DBF-தரவுத்தள கோப்பு; EXE-இயக்குநிலைக் கோப்பு.

file update : கோப்பு இற்றை நிலைப்படுத்துதல்; கோப்பு புதுக்குதல்.

file viewer : கோப்புப் பார்வையாளர் : ஒரு கோப்பின் உள்ளடக்கத்தைக் கண்காட்சியாகக் காட்டுகிற மென்பொருள். இது, பொதுவாக உருவமைவுகளின் ஒருவகையைக் கண்காட்சியாகக் காட்டும் திறனுடையது.

file virus : கோப்பு நச்சுநிரல்.

flexibility : நெகிழ்வுத்தன்மை .

fill : நிரப்பு : ஒர் ஒவியச் செயல் முறையில், கரையிட்ட பகுதியில் வண்ணத்தை மாற்றுதல். ஒர் அகல் தட்டில் பொதுவான அல்லது மடிநிலை மதிப்பளவுகளை சிற்றங்களின் ஒரு குழுமமாகப் பதிவு செய்தல்.

fill area : நிரப்புப் பகுதி : முனைகளைக் குறித்துரைத்து ஒரு மூடிய பலகோணக் கட்டத்தை வரைந்து, பின்னர் அதன் உட் பகுதியை நிரப்புகிற ஒரு வசதி.

fill character : நிரப்பு எழுத்து  : ஒரு சேமிப்புச் சாதனத்தில்