பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/598

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

fitting

597

fixed length field


லாக் (Prolog) கணினி மொழியில் இத்தகைய தருக்க முறை பயன்படுத்தப் படுகிறது.

fitting : பொருத்துதல் : தரவுகளின் தொகுதி மற்றும் வடிவமைப்பு விதிமுறைகளில் துல்லியமாகப் பொருத்துவதற்காக கோடுகள், மேற்பரப்பு அல்லது வளைவுகளைப் பற்றிய கணக்கீடுகளை கணினி வரைகலை முறையில் செய்வது.

fixed : நிலையான, மாறாத;குறிப்பிட்ட : ஒரு தரவு பதிவேட்டில் எப் போதும் நிலையாக இருக்கின்ற புலம் பற்றியது.

fixed area : குறிப்பிட்ட பரப்பு : குறிப்பிட்ட நிரலாக்கத்தொடர் அல்லது தரவு பகுதிகளுக்கென ஒதுக்கப்பட்ட உட்புற சேமிப்பகத்தின் பகுதி.

fixed block length : நிலைத்த தொகுதி நீளம்.

fixed disk : நிலை வட்டு : வட்டுத் தொகுதி நிரந்தரமாக ஏற்றிவைக்கப் பட்டுள்ள ஒரு வட்டு இயக்கி. பெரும்பாலான சொந்தக் கணினிகளில் உள்ள அகற்ற முடியாத வன்வட்டுகள் இவ்வகையைச் சேர்ந்தவை.

fixed head disk unit : பொருத்தப்பட்ட படிமுனை வட்டு அலகு : இருமை தரவுகளைக் குறிப்பிட காந்தப் புள்ளிகள் வடிவில் தரவுகளைத் தன் மேற் பரப்பில் காந்தமயக் குறியீடுகள் செய்யப்பட்டுள்ள ஒன்று அல்லது மேற்பட்ட வட்டுகளைக் கொண்ட சேமிப்புச் சாதனம். வட்டுகளைச் சுற்றி வட்டப் பாதைகளில் தரவுகளை வரிசைப்படுத்தியிருப்பார்கள். படி/எழுது முனைகள் ஒரு வழித்தடத்திற்கு ஒன்றாக செய்திகளைப் படிக்கவும் எழுதவும் செய்யும். படி/எழுது முனைகளின் மேலோ அல்லது கீழோ வட்டு சுழலும்போது ஒரு குறிப்பிட்ட வழித்தடத்தில் உள்ள தரவுகளைப் படிக்கவோ/ எழுதவோ முடியும். Mowable head disk unit-க்கு மாறானது.

fixed length field : நிலை நீளப்புலம் : புலத்தின் நிலையான வடிவளவு. எடுத்துக்காட்டு : 25 எண்மி (byte) புலம், ஒவ்வொரு பதிவேட்டிலும் 25 எண் மிகளை எடுத்துக்கொள்கிறது. இது, செயல்முறைப்படுத்துவதற்கும், படிப்

பதற்கும் எளிதானது. ஆனால், வட்டு இடப்பரப்பை வீணாக்கி, கோப்பு வடி வமைப்பைக் கட்டுப்படுத்துகிறது. இது, மாறியல் நீளப்புலம் (variable length field) என்பதிலிருந்து மாறுபட்டது.