பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/601

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

flag character

600

flashing


கிறதுபோன்ற சில நிலைகளை நிரலாக்கத்தொடரின் பிற்பகுதிக்கு உணர்த்தப் பயன் படுத்துவது. 2. சிறப்பு கவனத்திற்காக ஒரு பதிவேட்டைக் குறிப்பிடப் பயன்படுத்தப்படும் குறியீடு. சான்று : ஒரு நிரலாக்கத் தொடரை வரிசைப் படுத்தும்போது பிழை ஏற்படும் வாக்கியங்களுக்கு அடையாளக் குறியீட்டை அமைத்து நிரலாக்கத் தொடர் எழுதுபவரின் கவனத்தைக் கவரலாம். 3. குறுக்கீடு போன்ற சிறப்புச் சூழ்நிலைகளைக் குறிப்பிடுவது.

flag character : அடையாளக் குறி;சுட்டுக்குறி.

flame : உணர்வெழுச்சி : மின்னணுவியல் அஞ்சல் வழியாக உணர்வு பூர்வமாக அல்லது அதீதமாகச் செய்தித் தொடர்பு கொள்வதைக் குறிக்கும் கொச்சை வழக்கு.

flame bait : பிழம்புத் தீனி;எரிகொள்ளிக்கு எண்ணெய் : உணர்ச்சி வயமான விஷயத்தில் சர்ச்சையைக் கிளப்பும் கருத்துகளை முன்வைத்தல். இந்தியாவைப் பொறுத்தவரை சாதி, மதம், வழிபாட்டு இடம் தொடர்பான கருத்துகள் இவ்வகையில் அடங்கும். கணினித் துறையைப் பொறுத்தவரை அஞ்சல் பட்டியல், செய்திக் குழுக்கள், ஏனைய நிகழ்நிலைக் கருத்தரங்கு களில் பிறரின் சினத்தைக் கிளறும் வகையில் முன்வைக்கப்படும் ஒரு கருத்து.

flame fest : பிழம்பு விருந்து : இணையத்தில் செய்திக் குழுவிலும் அல்லது பிற நிகழ்நிலைக் கருத்தரங்கிலும் சர்ச்சையைத் தூண்டும் வகையில் தொடர்ச்சியாக முன் வைக்கப்படும் செய்திகள்/கருத்துரைகள்.

flamer : தீயாள்;நெருப்பாளி;பிழம்பர் : மின்னஞ்சலில், செய்திக் குழுக்களில், நிகழ் நிலை விவாத மேடைகளில், நிகழ்நிலை அரட்டைகளில் சின மூட்டும், சர்ச்சைக்கிடமான செய்தியை அனுப்பி வைப்பவர்.

flame war : தீப்போர்;பிழம்புப் போர் : அஞ்சல் பட்டியல், செய்திக் குழு மற்றும் பிற நிகழ்நிலைக் கருத்தரங்கில் காரசாரமான வாதப் பிரதிவாதமாக மாறிப்போகின்ற ஒரு கலந்துரையாடல்.

flash BIOS : அதிவிரைவு பயாஸ்.

flashing : மின்வெட்டு : ஒரு காட்சித் திரையில் எழுத்துகள் மின் வெட்டுப்போல் தோன்றி மறைதல். திரையில் காட்டப்