பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/608

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

floppy disk drive

607

flow


floppy disk drive : நெகிழ் வட்டு இயக்கி : ஒரு நெகிழ் வட்டின் மீது எழுதவும் படிக்கவும் செய்கிற ஒரு மின்னியல்-எந்திரவியல் சாதனம். வட்டு இயக்கியில் ஒரு படிக்கும்/எழுதும் முனை இருக்கும்;இது, வட்டின் மீதுள்ள தரவுக் கோப்புகளை அணுகுகிறது. தேவைப்பட்டால் அவற்றை நாளது தேதி வரைப் புதுப்பிக்கிறது. வட்டு இயக்கி, வட்டின் உள்முகக் காந்த ஊடகத்தை நிமிடத்திற்கு 360 சுழற்சி வேகத்தில் சுழலச் செய்கிறது. இதனால், வட்டில் எழுதும்/படிக்கும் முனையின் கீழுள்ள அனைத்துப் பகுதிகளும் குறைந்த இடைவெளிகளில் தோன்றுகின்றன. பெயர்ச் சுருக்கம் : FDD

floppy disk unit : நெகிழ் வட்டு அலகு : காந்தப்படுத்தப்பட்ட நெகிழ் வட்டுகளில் தரவுகள் பதிவு செய்யப்படும் புறச்சேமிப்புச் சாதனம்.

FLOPS : ஃபிளாப்ஸ் (மிதவை முனைச் செயற்பாடுகள்/வினாடி) : Floating Point Operation Per Second என்பதன் குறும் பெயர். மிதவை முனைக் கணிப்புகளை அளவிடும் அலகு. எடுத்துக்காட்டு : 100 மெகா ஃபிளாப்ஸ் என்பது, ஒரு வினாடி 10 கோடி மிதவை முனைச் செயற்பாடுகளாகும்.

flaptical : நெகிழ்ஒளிவம்;நிகழ் ஒளியியல் : காந்தம் மற்றும் ஒளிவத் தொழில் நுட்பங்களின் சேர்க்கை. இதனடிப்படையில் உருவாக்கப்படும் 3. 5 அங்குல சிறப்புவகை வட்டுகளில் மிக அதிகத் தரவுகளை பதிய முடியும். வட்டினில் காந்த வடிவிலேயே தரவு எழுதப்படுகிறது. படிக்கப்படுகிறது. ஆனால், எழுது/படிப்பு முனை லேசர் கதிர்மூலம் இடம் நிறுத்தப்படுகிறது. இன்சைட் பெரிஃ பெரல்ஸ் என்னும் நிறுவனம் இச்சொல்லை உரு வாக்கியது. வணிகக் குறியாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

floptical disk : நெகிழ் ஒளியியல் வட்டு;நெகிழ் ஒளி வட்டு : ஒளியியல் உத்திகளும், காந்த உத்திகளும் ஒருங்கிணைந்த ஒருவகை நெகிழ் வட்டு. இவை மிக அடர்த்தியான தரவு சேமிப்புத் தடங்களை உடையவை. இதனால் மிக உயர்ந்த சேமிப்புத் திறன் கொண்டவை. இது புதிய தொழில்நுட்பமாகையால், ஒளியியல் நெகிழ்வட்டுகள் இன்னும் அதிகமாக பயன்பாட்டுக்கு வரவில்லை.

floptical drive : நெகிழொளிவ இயக்ககம்.

flow : ஒழுக்கு;பாய்வு :