பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/616

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

foreground colour

615

fork


foreground colour : முன்புற வண்ணம்; முன்புல வண்ணம்; முன்னணி வண்ணம் : திரையில் எழுத்துகள் அல்லது வரை கலைகள் எழுதப்பட்டுள்ள வண்ணங்கள்.

foreground job : முன்புல வேலை;' முன்னணி வேலை.

foreground processing : முன் புறச் செய்முறைப்படுத்துதல்; முன்னணிச் செயலாக்கம்; முற் பகுதிச் செயலாக்கம் : கணிப்பு வசதிகளைப் பயன்படுத்தி முற்படு விளைகோள் பெறுவதற்கு வடிவமைக்கப்பட்டுள்ள கணினி செயல்முறை களைத் தானாகவே நிறைவேற்றுதல். இது பின்புறச் செய் முறைப்படுத்தலுக்கு மாறு பட்டது. திரையில் உள்ள அச்சடிக்கப்பட்டுள்ள எழுத்து கள் அல்லது வரையப்பட்டுள்ள புள்ளிகள்.

foreground programme : முற்பகுதி நிரலாக்கத்தொடர்; முன்னணி நிரலாக்கத் தொடர் : அதிக முன்னுரிமை உள்ள நிரலாக்கத் தொடர். பல நிரலாக்கத் தொடர் தொழில்நுட்பத்தினைப் பயன் படுத்தும் கணினி அமைப்பில் ஒரே நேரத்தில் இயக்கப்படும் நிரலாக்கத் தொடர்களில் முன்னதாக செயல்படுத்தப்பட வேண்டியது.

foregrounds : முன்புறங்கள்; முன்புலங்கள்; முன்னணிகள் : ஒரு பன்முகப் பணிப் பொறியமைவில், மிக உயர்ந்த முந்துரிமைச் செயல்முறைகள். பார்க்க : பின்புறப்பணி (Background task).

foreground task : முன்புலப் பணி.

forest : வனம்; காடு : மரங் களின் தொகுதி. தரவு கட்டமைப்பில் (Data Structure) தொகுப்புப் பட்டியல்கள் (Linked liss) மூலம் உருவாக்கப்படும் ஒருவகைக் கட்டமைப் புக்கு tree என்று பெயர். வேர் எனப்படும் தலைமை உறுப்புடன் பட்டியலின் ஏனைய உறுப்புகள் கிளைகளாக தொகுக்கப் பட்டிருக்கும். ஒன்றுக்கு மேற் பட்ட tree அமைப்புகள் இருப் பின் Forest என்கிறோம்.

forest & trees : காடு - மரங்கள் : "சேனல் கணிப்பு என்ற அமைவனம் தயாரித்துள்ள தரவு பகுப் பாய்வுச் செயல்முறை. இதில், பல்வேறு பயன்பாடு களிலிருந்து தரவுகள் ஒருங் கிணைக்கப்பட்டுள்ளது.

fork : கிளை : மேக்ஓஎஸ் இயக்க முறைமையில் ஒரு கோப்பினை அடையாளம் காணப் பயன்படும் இரு பகுதி களில் ஒன்று. ஒரு மெக்கின்டோஷ் கோப்பு, தரவு கிளை