பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/618

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

format

617

formatting characters


format : வடிவமைத்தல்;உருவமைவு, வடிவம் : 1. தரவுகளைக் குறிப்பிட்ட முறையில் அமைத்தல். 2. வெளியீட்டுக்கு ஏற்ற வகையில் செய்திகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பான நிரலாக்கத்தொடர்.

format, address : முகவரி வடிவ அமைப்பு.

format, addressless instruction : முகவரியிலா ஆணை வடிவம்.

format bar : வடிவமைப்புப் பட்டை : ஒர் ஆவணத்திலுள்ள எழுத்துருவை, அதன் உருவளவை, பாணியை, நிறத்தை மாற்றுவது போன்ற, பணிகளுக்கென ஒரு பயன்பாட்டுத் தொகுப்பில் இருக்கும் ஒரு கருவிப் பட்டை.

format card : அட்டை வடிவம்.

format effector : உருவமைவுத் தூண்டுச் சாதனம் : பதிவு செய்யப்பட்ட அல்லது பொதுவாக ஒரு குறியீடு மூலம் காட்சியாகக் காட்டப்படுகிற, தரவு அச்சடிப்பு உருவமை வினைச் சீரமைவு செய்வதற்குப் பயன் படுத்தப் படுகிறது. ஒரு கட்டுப் பாட்டு எழுத்து.

format operation : உருவமைவுச் செயற்பாடு.

format painter : வடிவம் தீட்டி.

format, print : அச்சுவடிவமைப்பு.

format programme : உருவமைவுச் செயல்முறை : ஒரு வட்டு வைத்துக் கொள்ளக் கூடிய சேமிப்புக்கூறு ஒவ்வொன்றின் மீதுள்ள கூறு அடையாளத்தைப் பதிவு செய்வதன் மூலம் ஒரு காலி வட்டினைத் தொடங்கி வைக்கிற மென்பொருள்.

format, record : ஏட்டு வடிவமைப்பு.

format specification : உருவமைவுத் தனி வரையறை;உருவமைவு வரையறை : செயல் முறை உட்பாட்டுக்கும் வெளிப் பாட்டுக்கும் இடையிலான தொடர்பினைக் குறித்துரைக்கும் முறைசார்ந்த தருக்க முறைமை யினைப் பயன்படுத்துகிற தானியக்கச் செயல்முறைப் படுத்தும் உத்தி.

formatted display : வடிவமைக்கப்பட்ட காட்சி;வடிவுறு காட்சி : ஒன்று அல்லது மேற்பட்ட காட்சிப்புலங்களின் உள்ளடக்கம் அல்லது தன்மைகளை, பயனாளர் வரையறுக்கும் திரைக்காட்சி.

formatting : வடிவமைத்தல்.

formatting characters : வடிவமைப்பு எழுத்துகள்.