பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/625

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

frame base CAI

624

frame relay


frame base CAI : சட்டக ஆதார கணினி உதவிபெறு கட்டளை : செயல் முறைப்படுத்திய கட்டளைகளை அடிப்படையாகக் கொண்ட கணினி உதவி பெறு கட்டளை உத்தி.

frame-based knowledge : சட்டகம் சார்ந்த அறிவு : சட்டகங்களின் ஒரு படிநிலை அல்லது இணைய வடிவில் குறிக்கப்படுகிற தரவு.

frame buffer : திரைத்தோற்றம் தாங்கி;சட்டக வைப்பகம் : கணினி வரைகலையில், ஒரு கணினி, படத்தை சேமிக்க ஏற்றுக் கொள்ளும் நினைவகத்தின் சிறிய பகுதி.

frame grabber : சட்டகப்பறிப்பி : கணினி வரைகலையில், ஒளிப் பேழை உருக்காட்சிகளை கணினி உருவாக்க உருக்காட்சிகளாக மாற்றுகிற ஒரு சாதனம். இந்தச் சட்டகப் பறிப்பி, செந்திறத் தொலைக்காட்சிக் குறியீடு களைப் பெற்று, நடப்பு ஒளிப் பேழைச் சட்டகத்தை ஒரு கணினி வரைகலை உருக்காட்சியாக இலக்க முறைப்படுத்துகிறது.

frame (computer), main : பெருமுகக் கணினி.

frame maker : சட்டக உருவாக்கி : "சட்டகத் தொழில் நுட்பக் கார்ப்ப ரேஷன்" என்ற அமைவனம் தயாரித்த மேசை மோட்டு வெளியீட்டுச் செயல் முறை. இது யூனிக்ஸ், மெக்கின்டோஷ், விண்டோஸ் ஆகியவற்றில் செயல்படுகிறது. கட்டமைவு செய்யப்பட்ட ஆவணங்களுக்குப் பொருத்தமான இது, இதன் முழுமையாக ஒருங்கிணைந்த சொல் செய்முறைப் படுத்து தலுக்கும், வரைகலைத் திறம்பாடுகளுக்கும் புகழ்பெற்றது.

frame rate : சட்ட வீதம் : 1. ஒரு ராஸ்டர் வருடு கணினித்திரையில் காட்டப்படுவதற்கு முழு ஒற்றைத் திரை படிமங்கள் எவ்வளவு வேகத்தில் அனுப்பி வைக்கப்படுகின்றன என்பதைக் குறிக்கிறது. மின்னணுக்கற்றை வினாடிக்கு எத்தனை முறை திரையை ஆக்கிரமிக்க வேண்டும் என்பதைக் குறிக்கிறது. 2. அசைவூட்ட (Animation) செயல்பாடுகளில், ஒரு வினாடிக்கு எத்தனைமுறை ஒரு படிமம் புதுப்பிக்கப்படுகிறது என்பதைக் குறிக்கிறது. சட்டவீதம் வினாடிக்கு 14 சட்டங்களைவிட அதிகமாயின் அசைவூட்டம் உண்மையான இயக்கம் போலவே தோற்றம் அளிக்கும்.

frame relay : சட்டக அஞ்சல் : x 25-ஐ விட விரைவாக அனுப்