பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/631

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

friendliness

630

front end


செலுத்தப்படும். துளையில்லாத தாள்களை உட்செலுத்த இது போன்ற உராய்வு செலுத்த முறை பயன்தரும்.

friendliness : தோழமை : ஒரு கணினி அல்லது நிரலாக்கத் தொடருடன் சேர்ந்து இயங்குவது எவ்வளவு எளிமையானது என்பதைக் காட்டுகிறது. பயனாளர்-தோழமை நிரலாக்கத் தொடரைக் கற்றுக்கொள்ள குறைந்த நேரமே போதுமானது;பயன்படுத்த எளிதானது.

friendly : தோழமையான : கணினியை அல்லது கணினி நிரலை எவரும் எளிதாகக் கற்றுக் கொள்ளவும், எளிதாகப் பயன்படுத்தவும் ஒரு வன்பொருள் அல்லது ஒரு மென்பொருளில் உள்ளிணைக்கப்பட்டுள்ள ஒரு வசதி. தோழமை என்பது பெரும்பாலான தயாரிப்பாளர்களால் வலியுறுத்தப் படுகிறது. பெரும்பாலான பயனாளர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

friendly interface : தோழமை இடைமுகம்;தோழமை பரி மாற்றம் : முகப்புக் கருவி மற்றும் கணினி நிரலாக்கத்தொடர் ஆகிய இரண்டையும் இணைத்து வடிவமைத்து, எப்போதாவது கணினியை இயக்குபவருக்கும் எளிமையாகச் செய்து தருவது.

friendly user : பயனாளர் தோழமை.

fringeware : கொசுறுப்பொருள் : இலவசமாகத் தரப்படும் மென்பொருள். ஆனால் அதன் மதிப்பும் செயல்திறனும் கேள்விக்குரியது.

frob : ஃப்ராப் : ஜாய்ஸ்டிக் அல்லது சுட்டுப்பொறி (மவுஸ்) போன்ற பிடிக்கும் சாதனத்துடன் விளையாடுவது.

from scanner : வருடி மொழியிலிருந்து;வருடியிலிருந்து.

front and end processor : தொடக்க மற்றும் இறுதிச் செயலகம் : புரவலர் கணினியின் தொடக்கம்/இறுதியில் உள்ள தனி தரவுத் தொடர்புக் கணினி. தரவுத் தொடர்புக்கு வரிசை ஒதுக்குதல், தரவு மாற்றல் பிழை ஆய்தல், செய்தி கையாளல் மற்றும் பிற விவர தரவுத் தொடர்பு பணிகளைக் கையாண்டு புரவலர் கணினிக்கு இந்த வேலைகளைக் குறைக்கிறது.

front end : மின்னிலை : பிறிதொரு பயன்பாடு அல்லது மென்பொருள் கருவியுடன் ஒரு இடைமுகத்தை ஏற்படுத்தித் தரும் ஒரு பயன்பாட்டு மென் பொருள் அல்லது அதன் ஒரு கூறு. இத்தகைய முன்னிலைக் கருவியாகச் செயல்படும் பயன்பாட்டுத் தொகுப்புகள் பின்புல