பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/634

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

full-page display

633

fully populated


காணப் பயன்படும் விவரங்களுள் அவரின் முழுப்பெயரும் ஒன்று.

full-page display : முழுப்பக்கம் காட்டுதல்;முழுப்பக்கக் காட்சி : திரையில் ஒரு நேரத்தில் 21 x 28 செ. மீ அளவுக்கு செய்தியைக் காட்டும் சொல் பகுப்பி அமைப்புகளில் பயன்படுத்தப்படும் முனையம்.

'full path : முழுப் பாதை : இயக்கம், தொடக்கம், விவரக்குறிப் பேடு, துணை விவரக் குறிப்பேடுகள் ஆகியவற்றை உள்ளடக்கி, கோப்பின் அல்லது பொருளின் பெயருடன் முடிவடையும் பாதைப் பெயர்.

ful pathname : முழுப் பாதைப்பெயர் : ஒரு படிநிலைக் கோப்பு முறைமையில் ஒவ்வொரு வட்டகத்திலும் வேர் கோப்பகம் (Root Directory) தொடக்க நிலையாக உள்ளது. அதனுள் ஏனைய கோப்பகம்/கோப்புறை களும் அவற்றில் உள் கோப்பகம்/கோப்புறைகளும் அமைகின்றன. ஒரு கோப்பினை அணுகுவதற்கு அது சேமிக்கப்பட்டுள்ள வட்டகப் பெயர் (Drive Name), வேர் கோப்பகம், கோப்பகம், உள்கோப்பகங்களை வரிசையாகக் குறிப்பிட வேண்டும். எடுத்துக்காட்டாக, myfile. doc என்னும் கோப்பு C வட்டகத்தில் Book என்னும் கோப்பகத்தில் Chapter 1 என்னும் உள்கோப்பகத்தில் சேமிக்கப்பட்டுள்ளது எனில், டாஸ் இயக்க முறை மையில், C : \ΒΟΟΚ\ CΗΑΡΤΕR1\ΜΥFΙLΕ. DOC என்பது அக்கோப்பின் முழுப் பாதையைக் குறிக்கும் பெயராகும்.

full project life cycle : முழுத்திட்ட ஆயுள் சுழற்சி : தொடக்கம் முதல் முடிவு வரையிலான திட்டம்.

full screen : முழுத் திரை : ஒளிக்காட்சித் (வீடியோ) திரையின் முழு முகமும் காட்சித் திரையாகப் பயன்படும் சூழ்நிலை.

full-screen application : முழுத்திரைப் பயன்பாடு.

full screen editing : முழுத் திரை தொகுப்பு;முழுத் திரைப் பதிப்பு : சொற்களை மாற்றுவதற்காக திரை முழுவதும் சுட்டியை நகர்த்தும் திறன்.

full text searching : முழு சொல் பகுதி தேடுதல்;முழுத் திரைதேடல் : கணினியின் துணை நினைவகத்தில் சேமிக்கப் பட்டுள்ள ஒரு கட்டுரை அல்லது நூலின் முழு சொற்