பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/636

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

function codes

635

functional description


மாறு அறிவுறுத்துகிற ஒரு செயல்முறைக் குறியீடு. செயற்பணி அழைப் புடன் சேர்ந்து வாதங்கள் அல்லது நிலை யளவுருக்களும் செல்லும்.

function codes : பணிமுறை குறியீடுகள் : வெளிப்புறச் சாதனங்களில் கட்டுப்பாட்டுப் பணிகளுக்கு உதவும் சிறப்புக் குறியீடுகள். காட்சித்திரையை காலிசெய் என்பது ஒரு பணிக் குறியீடு.

function key : பணி விசை;செயல்முறை விசை;சார்புச் சாவி;செயற்பணி விரற் கட்டடை;இயக்கச் சாவி : சிறப்பாக வடிவமைக்கப்பட்ட விசை. இதை அழுத்தும்போது கணினியின் விசைப்பலகை, சொல் பகுப்பி அல்லது வரைகலை முதலியவற்றில் சில பணிகளைத் துவக்குகிறது.

function key, user defined : பயனாளர் வரையறு பணிவிசை.

function library : செயற்பணி நூலகம் : செயல்முறை நிரல்களின் தொகுப்பு.

function overloading : செயல் கூறு பணிமிகுப்பு : ஒரு நிரலில் ஒரே பெயரில் பல்வேறு செயல்கூறுகளை வைத்துக் கொள்ளும் வசதி. அளபுருக் களின் (parameters) எண்ணிக்கை, வகை, வரிசை ஆகியவற்றின் அடிப்படையில் செயல் கூறுகளின் வேறுபாடு அறியப்படும். அளபுருக்களின் வகை, வரிசை ஆகியவற்றின் அடிப்படையில் மொழிமாற்றி (compiler) சரியான செயல் கூறினை தானாகவே அடையாளம் கண்டுகொள்ளும். (எ-டு) sin (float), sin (int) என்று இரண்டு செயல்கூறுகள் இருக்க முடியும். ஒன்று ஆரக் கோணத்தையும் இன்னொன்று கோணமதிப்பையும் ஏற்கும். sin (3. 142) /2. 0) என்பது sin (π/2) என்பதால் 1. 0 என்ற விடை கிடைக்கும். sin (45) என்பது 0. 5 என்ற விடையைத் தரும். பொருள்நோக்கு நிரலாக்க (Object Oriented Programming) மொழிகளில் செயல்கூறு பணி மிகுப்பு ஒரு முக்கிய கூறாகும். சி#, சி++, ஜாவா மொழிகளில் இது உண்டு.

functional decomposition : செயற்பணிச் சிதைவு : ஒரு செய்முறையை செயற்பாடுகாளாகப் பகுத்தல்.

functional description : பணிமுறை விளக்கம்;செயல் விவரிப்பு : ஒரு கணினி அமைப்பின் தேவைகளை அடையாளம் காணப் பயன்படுத்தப்படும் சொற்றொடர்.