பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

alphabetic code

63

alphanumeric display terminal



alphabetic code : எழுத்துக் குறி முறை.


alphabetical order : அகர வரிசை : ஆங்கிலத்தில் முதல் இசட் வரை.


alphabetic string : எழுத்துக் கோவை; எழுத்துச் சரம் : எழுத்துகளின் தொகுதிகளைக் கொண்ட ஒரு கோவை.


alphabetical sorting : அகர வரிசையாக்கம்; எழுத்தெண் வரிசையாக்கம்.


Alpha box : ஆல்ஃபா பெட்டி : ஆல்ஃபா கணினி : டெக் (DEC) நிறுவனத்தின் ஆல்ஃபா என அழைக்கப்படும் 21061 சிப்பினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட கணினி.


alpha build : தொடக்க உருவாக்கம்.


alpha channel ; எழுத்து வழித்தடம் : 32 துண்மி வண்ணக் கணினி அமைப்பில் கூடுதல் 8 துண்மி தரவு வழித் தடத்தைக் குறிக்கும் ஆப்பிள் கணினிச் சொல். இது படப்புள்ளிகளின் தெளிவைக் கட்டுப்படுத்துவதன் மூலம் பல ஒளிக்காட்சி மாற்றங்களுக்கு வழி வகுக்கிறது.


alpha geometric : முதல் வடிவக் கணிதம்.


alpha micro systems : ஆல்ஃபா மைக்ரோ சிஸ்டம்ஸ் : ஆல்ஃபா செயலியைக் கொண்ட ஒர் உயர் முனை நுண் கணினி, சிறு (mini) கணினி என்றும் வகைப்படுத்தலாம்.


alphamosaic : எழுத்துக் கோலம் : மிகக்குறைந்த தெளிவு கொண்ட காட்சி தொழில் துட்பம். ஆஸ்கியின் மேல்பகுதியைக் கொண்ட அடிப்படை வரைகலை எழுத்துகளை மட்டும் பயன்படுத்துவது.


alphanumeric : எழுத்தெண் : எழுத்தும் எண்ணும் கொண்ட வரைவுருக்களுக்கான பொதுச் சொல் எழுத்துகள். ஏ (A) முதல் (Z) இசட் வரை, எண் இலக்கங்கள், சிறப்புக் குறியிடுகள் ஆகியவற்றை உள்ளடக்கியது.


alphanumeric characters : எழுத்தெண் வரையுருக்கள் : தரவு செயலாக்க இயக்கங்களில் பயன்படுத்தப்படும் எழுத்துகள், எண்கள் மற்றும் சிறப்புக் குறியீடுகள்.


alphanumeric code : எழுத்தெண் குறிமுறை : A முதல் Z வரையுள்ள எழுத்துகள் மற்றும் 0 முதல் 9 வரையுள்ள எண்கள் இவற்றில் சிலவற்றைக் கொண்ட தொகுதி.


alphanumeric display terminal : எழுத்தெண் காட்சி முனையம் :