பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/640

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

G

639

games, computer


G

G : ஜி : "ஜிகா" என்பதன் குறியீடு. ஜிகா என்பது ஏறத்தாழ நூறு கோடி. கணினியில் இதன் மதிப்பு 1, 073, 741, 824, (230) ஆகும். வழக்கமான 1, 000, 000, 000 அன்று. இது _ ஐ விட அதிகம் எனப் பொருள்படும் "Greater than" என்பதன் சுருக்கக் குறியீடு.

gage array : வழி வரிசை.

gain : ஆதாயம் : பெருக்கம் : ஒரு இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு சமிக்கைகளை அனுப்பும் போது பெருக்கிகள் மூலம் மின்சக்தி அல்லது சமிக்கையின் சக்தி அதிகரித்தல். ஒரு குறிப்பிட்ட அளவுக்குமேல் போகும் டெசிபல் முறையில் ஆதாயத்தின் அளவு கூறப்படும்.

gallium aresenide : கேலியம் ஆர்செனைடு : உயர்நிலை அரைக் கடத்திகளை உருவாக்கப் பயன்படும் படிகப்பொருள். சிலிக்கானைவிட உயர்ந்தது. ஆனால் அதிகம் செலவாகக் கூடியது.

Game Control Adapter : விளையாட்டுக் கட்டுப்பாட்டுத் தகவி : ஐபிஎம் மற்றும் ஒத்தியல்பு சொந்தக் கணினிகளில் அமைந்துள்ள ஒரு மின்சுற்று அட்டை. கணினியின் விளையாட்டுத்துறை வழியாக வரும் உள்ளீட்டு சமிக்கைகளை செயலாக்குகிறது. சுட்டுக்குறியின் இடநிலையை மாறுகின்ற மின்னழுத்தமாய் மாற்றித் தரும் மின்னழுத்த மானி (Potentiometer) இதில் உண்டு. தொடர்முறையை இலக்க முறையாக மாற்றித் தரும் கருவி இந்த மின்னழுத்த அளவுகளை எண்களாக மாற்றித் தரும்.

game pack : விளையாட்டுத் தொகுதி : ஒரு கணினியில் ஒரு குறிப்பிட்ட விளையாட்டினை இயக்குவதற்கான ஓர் ஆயத்தச் செயல்முறை.

game port : விளையாட்டுத்துறை : ஐபிஎம்மின் சொந்தக் கணினிகளிலும் மற்றும் அதன் ஒத்தியல்புக் கணினிகளிலும், ஜாய்ஸ்டிக் மற்றும் விளையாட்டுக் கைப்பிடிகள் அமைக்கப்பட்டுள்ள ஓர் உள்ளிட்டு/வெளியீட்டுத்துறை. பொதுவாக, ஏனைய உள்ளிட்டு/வெளியீட்டுத் துறைகளடங்கிய ஒற்றை விரிவாக்க அட்டையிலேயே விளையாட்டுத்துறையும் இணைக்கப்பட்டிருக்கும்.

games, computer : கணினி விளையாட்டுகள்.