பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/642

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

garbage character

641

gate array


கொண்டு செல்லப்படும் தேவையற்றதும், பொருளற்றதுமான தரவுகள்.

garbage characters : குப்பை எழுத்துகள்.

garbage collection : குப்பை சேர்த்தல்;குப்பை திரட்டல் : ஒரு குப்பை கோப்பிலிருந்து செயலற்ற இருப்பிடங்களைத் துடைத்தெடுப்பதற்கு இவ்வாறு கூறுவார்கள்.

garbage in garbage out : குப்பையிடக் குப்பை வரும் : மோசமான தகவலை உள்ளிடுவதையும், அதே போன்ற மோசமாக வெளிப்பாட்டை ஒரு முடிவாகப் பெறுவதையும் குறிக்கும் வழக்குச்சொல்.

gas discharge : வாயு மின்னிறக்கம்.

gas discharge display : வாயு உமிழ் திரைக்காட்சி : கையடக்கக் கணினிகளில் பயன்படுத்தப்படும் தட்டை வடிவத் திரைக்காட்சி. கிடைமட்ட, செங்குத்து மின்முனை தொகுதிகளுக்கு இடையே நியான் வாயு நிரப்பப்பட்டிருக்கும். ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு முனை மின்னூட்டம் பெறும்போது இரு முனைகளும் சந்திக்கும் இடத்தில் நியான் வாயு எரியும் நியான் விளக்கில் உள்ளது போல). இந்தச் சந்திப்புப் புள்ளி ஒரு படப்புள்ளி (Pixel) ஆகும்.

gas display : வாயு காட்சி;வளிமத் திரைக்காட்சி : மின்சாரம் செலுத்தப்படும்போது ஒளி வீசுகின்ற வகையில் நிரப்பப்பட்ட காட்சித்திரைப் பலகையில் உள்செயலற்ற வாயு. ஒளி வீசும் வாயு மூலம் தேவைப்படும் இடங்களில் டாட்மேட்ரிக்ஸ் போன்ற முறையில் எழுத்துகள், படங்கள் ஆகிய வடிவில் மின்சாரம் செலுத்துவதன் மூலம் புள்ளிகளை உருவாக்க முடியும்.

gate : வாயில்;கதவு : 1. ஒரு வெளியீட்டைக் கட்டுப்படுத்தும் இரண்டு அல்லது மேற்பட்ட உள்ளீடுகள் கொண்ட அளவை மின்சுற்று. 2. ஆரம்பத்திலிருந்து வடிந்துபோகும் வரை மின் ஓட்டத்தைக் கட்டுப்படுத்தும் புல விளைவு டிரான்சிஸ்டர்களைக் கட்டுப்படுத்தும் பொருள்.

gate, AND : உம் வாயில்.

gate array : வாயில் வரிசை : தொடர்பில்லாத தருக்கமுறைக் கூறுகளைக் கொண்டிருக்கிற சிப்புவகை கூறுகளிடையிலான பாதைகளின் மேற்பரப்பு உலோகப் படுகையினை அடி