பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/644

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

gaussian distribution

643

gender bender


gaussian distribution : குறிப்பற்ற பகிர்மானம் : மணி வடிவ வளைகோட்டினை வரைகோடாக வரையப்படுகிற நிகழ்வுகளின் குறிப்பற்ற பகிர்மானம். இயல்பான அல்லது புள்ளிவிவர நிகழ்தகவு வெளிப்பாட்டினை குறிப்பிடுவதற்கு இது பயன்படுத்தப்படுகிறது.

gaussian noise : குறிப்பற்ற ஓசை : செய்தித்தொடர்புகளில், ஒரு கம்பியில் மின்விசையோட்டத்தின் மூலம் குறிப்பின்றி உருவாக்கப்படும் இடையீடு. இதனை வெண்மை ஓசை" (White noise) என்றும் கூறுவர்.

gb : ஜிபி : இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இணையதளத்தைக் குறிக்கும் புவிப்பிரிவு பெருங்களப் பெயர்.

GB : ஜிபி : ' giga byte என்பதன் குறும்பெயர்.

g-commerce : அரசு வாணிகம்.

GCR : ஜிசிஆர்;குழுக்குறியீட்டுப் பதிவு.

. gd : ஜிடி : கிரினேடா நாட்டைச் சேர்ந்த இணையதளம் என்பதைக் குறிக்கும் புவிப்பிரிவுப் பெருங்களப் பெயர்.

GE : ஜிஈ : ஒரு செய்முறையில் ஒரு தொடர்முறை இயக்கியாகப் பயன்படுத்தப்படுகிற ஒரு சுருக்கக் குறியீடு. இது, ""_-ஐ விட அதிகம்" அல்லது ""_க்குச் சமம்" என்பதைக் குறிக்கும்.

gear wheels : பல்லிணைச் சக்கரங்கள்.

geek : கற்றுக்குட்டித்தனம் : நாகரிகமற்ற முறையில் கணினியைப் பயன்படுத்துவது.

GEM : ஜிஇஎம் : (வரைகலைச் சூழல் மேலாளர்) : Graphics Environment Manager என்பதன் முன்னெழுத்துச் சுருக்கம்.'இலக்கமுறை ஆராய்ச்சி' எனப்படும் டிஜிட்டல் ரிசர்ச் அமைவனம், சொந்தக் கணினிகளுக்காகத் (PC) தயாரித்துள்ள வரைகலைப் பயன்படுத்துவோர் இடைமுகப்பு."வெஞ்சுரா பப்ளிஷர்"என்ற அமைவனம், இதன் 'இயக்கநேரப் பதிப்பு' ஒன்றைத் தயாரித்துள்ளது.

gemisch : கெமிஷ்ச் : மருத்துவப் பதிவுப் பயன்பாடுகளுக்காக உருவாக்கப்பட்ட நிரலாக்கத்தொடர் மொழி.

genapp : ஜெனாப் : DCM தரவுப் பொருள்களுக்கான ஒரு பொறியமைவு. இது நான்காம் தலைமுறை பயன்பாட்டு மேம்பாட்டுப் பொறியமைவு ஆகும்.

gender bender : பாலின மாற்றி : ஒரு மின்னியல் இணைப்பியின்