பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/659

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

grade sheet

658

grammer check


திறன் மதிப்பிடப்படுகிறது. சேவைத்தரம் 0. 002 என மதிப்பிடப்பட்டால் ஒரு பயனாளரின் அழைப்பு மறுமுனை சென்றடைய அந்தக் குறிப்பிட்ட கால நேரத்தில் (காலை, மாலை, இரவு) 99. 8 விழுக்காடு வாய்ப்புள்ளது என்று பொருள்.

grade sheet : மதிப்பெண் சான்றிதழ்.

gradient : படித்தரம்/படித்திறன்.

graf port : வரைவுத் துறை : ஆப்பிள் மெக்கின்டோஷ் கணினிகளில் வரைகலைப் பணிச் சூழலை வரையறுப்பதற்கான ஒரு கட்டமைவு. திரையில் தோன்றும் ஒவ்வொரு சாளரத்திலும் ஒரு வரைவுத்துறை இருக்கும். திரையில் தோன்றும் வரைகலைப் படங்களை பின்னணியிலுள்ள சாளரத்திற்கோ அல்லது ஒரு கோப்பிலோ சேமிக்க இந்த வரைவுத்துறை பயன்படுகிறது.

graftal : வரைவுக்கூறு;வரைவுரு : வரைவியல் வடிவங்களின் தொகுதி. மெய்போலத் தோற்றமளிக்கும் சிறப்பு விளைவுக் காட்சிகளை உருவாக்கும் தொழில் பிரிவில், மரங்கள், செடிகொடிகள் போன்ற உருத்தோற்றங்களை வடிவமைக்க வரைவுருக்கள் பயன்படுகின்றன. துணுக்குருக்களை (Fractals) ஒத்திந்தபோதிலும் வரைவுருக்களை இணைத்து உருத்தோற்றங்களை வடிவமைத்தல் மிகவும் எளிது.

grammatic : இலக்கணச் சரிபார்ப்புச் செயல்முறை : டாஸ், விண்டோஸ், மெக்கின்டோஷ், யூனிக்ஸ் போன்றவற்றுக்கு "Reference Software" என்ற அமைவனம் தயாரித்துள்ள "Grammatic" என்ற இலக்கணச் சரிபார்ப்பு செயல்முறை.

grammatical error : இலக்கணப் பிழை : ஒரு நிரலாக்கத்தொடர் மொழியின் அமைப்பு அல்லது விதிகள் பின்பற்றப்படாததன் விளைவாக ஏற்படும் பிழை. Syntax error என்றும் அழைக்கப்படுகிறது.

grammatical mistake : இலக்ககணத் தவறு.

grammer;இலக்கணம்;வரையறுக்கப்பட்ட விதிமுறைத் தொகுப்பு : ஒரு மொழியின் பல்வேறு கூறுகளை எவ்வாறு இணைக்கலாம் என்பதற்கான விதிகள்.

grammer checker : இலக்கணச் சரிபார்ப்பு : ஒரு வாக்கியத்தின் இலக்கணத்தைச் சரிபார்க்கிற மென்பொருள். இது முடிவுறாத வாக்கியங்களையும், தவறான