பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/660

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

grandfather file

659

Graphical kernel system


சொற்றொடர்களையும்,பிழையான நிறுத்தக்குறிகளையும்,மிகு சொல்லாட்சியினையும், இலக்கணப் பிழைகளையும் சரிபார்த்து எடுத்துரைக்கிறது.

grandfather file:பாட்டன் கோப்பு:தாத்தா கோப்பு.

grand total:இறுதி கூட்டுத்தொகை.

granularity:சிறுமணிச் செறிவு:ஒரு பொறியமைவின் அகவரிச் செறிவு சிறுமணிச் செறிவு எந்த அளவுக்கு அதிகமாக இருக்கிறதோ அந்த அளவுக்கு அந்தப் பொறியமைவு நெகிழ் திறனுடையதாக இருக்கும்.

graph:வரைபடம்:1.இரண்டு அல்லது மேற்பட்ட மாறும் அளவுகளின் உறவினைக் காட்டும் படம்.ஒரு கணித வரைபடத்தில் பொதுவாக இரண்டு அச்சுகளை வைத்து ஒரு வளைவுகோடு விவரங்களுக்குகேற்ப வரையப்படும்.2.Chart என்றும் சொல்லப்படும்.

graph chart:வரைவு நிரல்படம்.

graph theory:வரைவியல் கோட்பாடு.

graphic accelerator:வரைகலை.

graphic adapter:வரைகலைஏற்பி:வரைகலைத் தகவமைவி:திரையில் வரைகலைகளைக் காட்சியாகக் காட்டுவதற்கு உதவுகிற கணினி வன்பொருள் அமைப்பி.

graphical design:வரைகலை வடிவமைப்பு.

graphical divice interface:வரைகலைச் சாதன இடைமுகம்.

Graphical Kernel System:வரைகலை கருவக முறைமை:வரைகலை உருவங்களை வடிவமைக்க,கையாள,சேமிக்க,பரிமாறிக்கொள்ள, அன்சி(ANSI)மற்றும் ஐஎஸ்ஓ(ISO)அமைப்புகள் ஏற்றுக் கொண்டுள்ள கணினி வரைகலைத் தர வரையறை.வன்பொருள் நிலையில் இவை செயல்படுத்தப்படுவதில்லை.பயன்பாட்டுத்தொகுப்பு நிலையிலேயே கடைப்பிடிக்கப்படுகின்றன.ஒரு தனிப்பட்ட சாதனத்துக்கென இல்லாமல்,விசைப் பலகை,சுட்டி,காட்சித்திரை இவையிணைந்த பணி நிலையங்களுக்கானவை.1978 ஆம் ஆண்டு இருபரிமாண வரை கலைக்காகவே இம்முறைமை உருவாக்கப்பட்டது.பின்னாளில் ஜிகேஎஸ்-3டி(GKS-3D)என்ற பெயரில் முப்பரிமாண வரைகலைக்கும் விரிவாக்கப்பட்டது.