பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/662

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

graphic display resolution

661

graphic primitive


கணினியை அனுமதிக்கும் இயக்கமுறை.

graphic display resolution : வரைகலைமுறை காட்சித் தெளிவு : வரைவியல் காட்சிப் பிரிதிறன் : ஒரு காட்சித்திரையில் ஒரு வரியில் எத்தனை எழுத்துகளையும் கோடுகளையும் காட்ட முடியும் என்பது.

graphic display terminal : , வரைகலை முறை காட்சி முனையம் : வரைவியல் காட்சி முனையம் : திரையில் தகவலைக் காட்டும் கணினி முனையம். காத்தோட் கதிர்க்குழாய், தொலைக்காட்சி முனையம் அல்லது காட்சி முனையம் போன்றவை இதில் அடங்கும்.

graphic display unit : வரைகலைக் காட்சி அலகு : வரைகலை உருக்காட்சிகளைத் திரையில் காட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் காட்சிச்சாதனம்.

graphic field : வரைகலைப் புலம்.

graphic input device : வரைகலைமுறை உள்ளிட்டுச் சாதனம் : உருவங்களை சேமித்து, மறு உருக்கொடுத்து, காட்சிக்கு வைத்து, மாற்றும் வசதி அளித்துக் கையாள்வதற்குக் கணினிக்கு புள்ளிகளை அளிக்கக்கூடிய இலக்கமாக்கி போன்ற சாதனம்.

graphic limits : வரைகலைமுறை எல்லைகள் : இலக்கமுறை வரைவி போன்ற வரைபடமுறை சாதனத்தின் பிளாட்டிங் பகுதி. அதன் எந்திரஎல்லைகள். உருளையின் அளவு, பிளேட்டர் போன்றவை வரையறுக்கப்படும்.

graphic object : வரைகலைப் பொருள்.

graphic output : வரைகலைமுறை வெளியீடு : கணினி உருவாக்கும் வெளியீடு. புலனாகும் காட்சித்திரை அச்சுவெளியீடுகள் அல்லது பிளாட்டுகள் போன்ற வடிவத்தில் வெளியிடப்படும்.

graphic output device : வரைகலை முறை வெளியீட்டுச் சாதனம் : ஒரு உருவத்தைக் காட்டுவதற்கோ, அல்லது பதிவு செய்வதற்கோ பயன்படுத்தப்படும் சாதனம். மென்பிரதிக்கு காட்சித்திரை ஒரு வெளியீட்டுச் சாதனம். வன்பிரதிக்கு வெளியீட்டுச் சாதனங்கள் காகிதம், திரைப்படம் அல்லது டிரான்ஸ் பரன்சிகள் வடிவில் உருவத்தை வெளியிடுகின்றன.

graphic package : வரைகலைத் தொகுப்பு : எண்மானத் தரவுகளைக் காட்சி உருவங்களாக மாற்றக்கூடிய மென்பொருள்.

graphic primitive : வரைகலை மூலம் : புள்ளி, வரி, வில்