பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/663

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

graphics

662

graphics file


வளைவு போன்ற அடிப்படையான வரைகலைக் கட்டுமானத் தொகுதி.ஒரு திண்ம உருமாதிரிப் பொறியமைவில்,நீள் உருளை,கன சதுரம்,கோளம் ஆகியவை இதற்கு எடுத்துக்காட்டுகள்.

graphics:வரைகலை முறையியல்:வரைவு முறைகள்:வரைகலையியல்;வரைவியல்:திரை, காகிதம் அல்லது திரைப்படங்களில்வெளியிடப்படும் கணினி உற்பத்தி செய்யும் எந்த ஒரு படத்தையும் இவ்வாறு கூறப்படும்.சாதாரண கோடு அல்லது பட்டைக் கோடுகள் முதல் வண்ணமிகு, விளக்கப்படங்கள் எனப்படும்.

graphics,computer:கணினி வரைவியல்; கணினி வரைகலை.

Graphics Controller:வரைகலைக் கட்டுப்படுத்தி:திரைக்காட்சிக்கான தேக்கு நினைவகத்தைக் கணினி அணுகுவதற்கு அனுமதிக்கின்ற இ.ஜி.ஏ,விஜிஏ ஒளிக்காட்சித் தகவியின் ஒரு பகுதி.

graphics coprocessor:வரைகலைத் துணைச் செயலி:சில ஒளிக்காட்சி தகவிகளில் இணைக்கப்பட்டிருக்கும் தனிச்சிறப்பான நுண்செயலி.மையச்செயலகத்தின் பிற பணிக்கான ஆணைகளுக்கு ஏற்ப,கோடுகள் நிரப்பிய பரப்புகளால் ஆன வரைகலை உருவங்களை இச்செயலி உருவாக்கும்.

graphics data structure:வரைகலைத் தரவுக் கட்டமைவு:ஒரு வரைகலைப் படிமத்தின் ஒன்று அல்லது மேற்பட்ட கூறுகளைச் சுட்டுவதற்கென்றே தனிச்சிறப்பாய் வடிவமைக்கப்பட்ட ஒரு தரவுக் கட்டமைவு.

graphics display:வரைகலைமுறை காட்சி: அமைப்பிலிருந்து எடுத்து வெளியீட்டுச் சாதனத்தால் காட்டப்படும் வரைபடமுறை தரவுகள்.

graphics engine:வரைகலை எந்திரம் :முதன்மை மையச்செயலகத்தை(CPU) நம்பியிராமல் சுதந்திரமாக வரைகலைச் செயல் வரைவுகளை செய்கிற தனிவகை வன்பொருள். இது பல்வேறு செயற்பணிகளில் எதனையும் செய்யும்.எடுத்துக்காட்டு:வரைகலை வடிவகணித உருவாக்கம்:புள்ளிக்குறிப்பெருக்கம்:நினைவகத்திலிருந்து காட்சிக்கு விரைவாகத் தரவுகளை மாற்றுதல்.

graphics file:வரைகலைக் கோப்பு: வரைகலைத் தரவுகளை மட்டுமே கொண்டிருக்