பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/668

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

GREP

667

grid chart


வந்தது. 1582இல் மூன்றாம் போப் கிரிகோரி புதிய காலக்கணக்கீட்டு முறையை அறிமுகப்படுத்தினார். அதுவே கிரிகோரியன் காலண்டர் எனப்படுகிறது. இது, முந்தைய முறையைவிட மிகத்துல்லியமான முறையாகும். ஓர் ஆண்டுக்கு 365. 2122 நாட்கள் என மிகத்துல்லியமாகக் கணக்கிடப்பட்டது. இதன்படி நூறால் வகுபடும் ஓர் ஆண்டு நானுறாலும் வகுபட்டால் மட்டுமே நீள் (Leap) ஆண்டாகும். அதாவது 366 நாட்களைக் கொண்டதாகும். இதன்படி, 2000 ஒரு நீள் ஆண்டு. ஆனால் 1900 ஒரு நீள் ஆண்டில்லை. கி. பி. 1-ம் ஆண்டிலிருந்து கூடுதலாகக் கணக்கிடப்பட்ட 10 நாட்கள் 1582 அக்டோபர் மாதத்தில் கழிக்கப்பட்டன. ஆனாலும் இங்கிலாந்தும் அதன் காலனிகளும் புதிய காலண்டரை ஏற்றுக்கொள்ள வில்லை. 1752ஆம் ஆண்டில் தான் அவை கிரிகோரியன் காலண்டரை ஏற்றுக் கொண்டன. 1952 செப்டம்பர் மாதத்தில் 11 நாட்கள் கழிக்கப்பட்டன.

GREP1 : கிரெப்1 : முழுதளாவிய இயல்பான சொல்லமைப்பைத் தேடிக் காட்டல் என்று பொருள்படும் Global Regular Expression Print என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஒரு கோப்பில் அல்லது கோப்புகளில் ஒரு குறிப்பிட்ட சொல்லைத் தேடிக்காணும் யூனிக்ஸ் கட்டளை.

GREP2 : கிரெப்2 : யூனிக்ஸின் கிரெப் கட்டளையைப் பயன்படுத்தி ஓர் உரைப்பகுதியைத் தேடும் முறை.

grid : தொகுப்பு : கட்டம் : 1. காட்சித்திரை அல்லது இலக்கமாக்கியில் காட்டப்படும் ஒரே மாதிரியான இடைவெளிப்புள்ளிகள் உள்ள கட்டமைப்பு. ஒரு இடத்தைக் கண்டுபிடிக்கவும், ஒரு வடிவமைப்பு அல்லது துல்லியமான வரை படங்களை உருவாக்கவும் பயன்படுத்தப் படுகிறது. 2. நிரல் நிரைகளாக மின்னணு விரிதாள் மாதிரிகளைக் காட்டுவது. 3. ஒரு புள்ளியின் மதிப்பைக் கண்டுபிடிக்கப் பயன்படும் ஒரு வரைபடத்திலுள்ள குறுக்கு வாட்டு மற்றும் செங்குத்துக் கோடுகள். 4. வட்ட வரைபடத் தில், தொகுதி என்பது மையப் பகுதியிலிருந்து வட்டமாக வெளிப்புறம் சாய்ந்திருக்கும் கோடுகளின் தொகுதி.

grid chart : தொகுப்பு வரைபடம் : கட்ட வடிவ வரைபடம் : உள்ளீட்டுத் தரவுவை அதன்