பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/669

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

gridding

668

grounding


பயன்பாட்டு நிரலாக்கத் தொடர் பயன்பாடுகளுக்குத் தொடர்புபடுத்தும் பட்டியல்.

gridding : தொகுப்பமைத்தல் : கட்டமாக்கல் : முடிவுப்புள்ளிகள் யாவும் தொகுதிப்புள்ளிகளின் மீது விழுமாறு அமைக்க வேண்டிய வரைபட உருவ கட்டுமான சிக்கல்.

grid layout : கட்ட உருவரை.

gridsheet : தொகுப்புத்தாள்;கட்டத்தாள் தொகுப்பு போன்றதுதான். விரிதாள் அல்லது பணித்தாளைக் குறிக்கும்.

grip : கிரிப் : வரைகலை இடைவினைச் செயல்முறைப்படுத்தும் மொழி.

grok : கிராக் : ஆழமாய், தீர்க்கமாய் புரிந்துகொள்ளல். திரு. ராபர்ட் ஏ. ஹெய்ன்லெய்ன் எழுதிய அறியாத நாட்டில் தெரியாத ஆள் (Stranger in a Strange Land) என்னும் புதினத்தில் பயன்படுத்தப்பட்ட சொல். அருந்துதல் என்று பொருள்படும் மார்சியன் மொழிச் சொல்லும் ஆகும். பாலை நிலத்து வாசி நீரின்மீது கொள்ளும் அக்கறையைப் போன்று முனைப்பு ஆர்வத்தைக் குறிக்க மார்சியன் மொழியில் இச்சொல் பயன்படு கிறது. இணையக் கலந்துரையாடல்களில் கணினிப் புலமையைக் குறிக்க குறும்பர்கள் (Hackers) இச்சொல்லைப் பயன்படுத்துவர்.

groove format : வடிவம்.

ground : தரைத் தொடர்பு : ஒரு மின்சுற்றிலிருந்து பூமிக்கு இணைப்பு ஏற்படுத்தும் பாதை அல்லது தொடுகின்ற உடலோடு ஏற்படுத்தும் தொடர்பு. பொதுவாக, ஒரு பாதுகாப்புச் சாதனமாக இது பயன்படுகிறது.

ground current : தரை மின்னோட்டம் : ஒரு தரை இணைப்பில் காணப்படும் மின்னோட்டம். இது சமநிலையற்ற மின்னியல் ஆதாரங்களினால் ஏற்படலாம். எடுத்துக்காட்டு : இரு கணினிகளுக் கிடையிலான ஒரு செய்தித் தொடர்புவழியில் தரை இணைப்பு, தனித்தனியே மின்விசை பெறுதல்.

ground fault : தரைக்குறைபாடு : ஒரு மின்னியல் அமைப்பியின் செயலிழப்பு அல்லது இடி, மின்னல், புயல் போன்ற புறநிலை மின்னியல் ஆதாரங்களிலிருந்தான இடையீடு காரணமாக தரை இணைப்பில் உண்டாகும் தற்காலிக மின்னோட்டம்.

grounding : தரைஇணைப்பு : மனிதர்களுக்கும், கணினிகளுக்கு மின்சக்தி ஓட்டம் தீங்கு