பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

American Federation of

66

American Society for



வரிசை முறைமையை உருவாக்கியதன் மூலம் கணினிக் கட்டமைப்பில் புரட்சியை நிகழ்த்தினார். இந்தக் கணினியில் ஒருங்கிணைந்த இணைப்புகள் முதலில் பயன்படுத்தப்பட்டன. அவர் பின் அம்தால் வாரியத்துக் காகப் பல கணினிகளை வடிவமைத்தார்.


American Federation of information Processing Societies (AFIPS) : அமெரிக்க தகவல் செயலாக்க சங்கங்களின் கூட்டமைப்பு : கணினி, அறிவியல் மற்றும் தரவு செயலாக்க நிறுவனங்களின் பிரதிநிதித்துவ அமைப்பு. உலகின் மிகப் பெரிய கணினி மாநாடகிய வருடாந்திர தேசிய கணினி மாநாடுகளை சார்பாளராக நடத்துதல், அரசின் கல்வி, ஆய்வு நடவடிக்கைகள், தர நிலைகள், நடைமுறைகள், கணினி வரலாற்றியல் தொடர் பான குழுப் பணிகளை நிறை வேற்றுதல் உள்பட பல நடவடிக்கைகள் இதன் பணிகளாகும். தரவு செயலாக்கத்துக் கான பன்னாட்டுக் கட்டமைப்பில் அமெரிக்கப் பிரதிநிதியாகவும் உள்ளது.


American National Standards Institute (ANSI) : அமெரிக்க தேசிய தர நிறுவனம் : அமெரிக்காவில் சுய தர நிலைகளுக்கான தேசிய ஒப்புதல் நிறுவனமாகவும் ஒருங்கிணைப்பு நிறுவனமாகவும் இவ்வமைப்பு செயல் படுகிறது.


American Online (AOL) : அமெரிக்கா ஆன்லைன் (ஓர் இணைய நிறுவனம்) : இணையத்தில் மின்னஞ்சல், செய்தி, கல்வி, பொழுதுபோக்கு மற்றும் பிற சேவைகளை வழங்கும் இணைய தகவல் சேவை நிறுவனம். அமெரிக்காவில் வியன்னா வர்ஜீனியாவைத் தலைமையகமாய் கொண்டது. அமெரிக்காவிலேயே மிகப் பெரிய இணையச் சேவை மையம்.


American Society for Information Science (ASIS) : தகவல் அறிவியல் சங்கம் : தகவல் பரிமாற்றத்தை மேம்படுத்த உழைக்கும் நூலகர்கள், தகவல் வல்லுநர்கள், அறிவியலாருக்கு அரங்கம் ஒன்றை வழங்கும் தொழில் முறை அமைப்பு இது. இதன் உறுப்பினர்கள் பெரும் பாலும் கற்றவர்கள், செயல் முறை நிர்வாகிகள். மேலாளர் கள், ஒருங்கிணைப்பாளர்கள், தகவல் துறை தொழில் துணுக்க வல்லுநர்கள், அறிவியலார்கள். இவர்கள் முறைமை ஆய்வு, வடிவமைப்பு ஆகிய துறைகளில் பணிபுரிகிறார்கள். தகவல் தொடர்பு திட்டங்களை,