பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/672

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

guest computer

671

gzip



வழங்குபவர்கள் இதுபோன்ற ஒரு பயனாளரை உருவாக்கி வைத்திருப்பர். அப்பெயரைப் பயன்படுத்தி வருங்கால வாடிக்கையாளர்கள். யார் வேண்டு மானாலும் நுழைந்து, வழங்கப் படும் சேவைகளின் மாதிரியை நுகர்ந்து பார்க்கலாம்.

guest computer : விருந்தினர் கணினி, கிளைக் கணினி : வேறொரு விருந்தினர் கணினி யின் கட்டுப்பாட்டில் இயங்கும் கணினி.

guest page : விருந்தினர் பக்கம்.

GUIDE : கெய்ட் : Guidance of Users of Integrated Data Processing என்பதன் குறும்பெயர். பேரளவு ஐபிஎம். கணினிகளைப் பயன்படுத்தும் பயனாளரின் பன்னாட்டுச் சங்கம்.

guide edge வழிகாட்டு விளிம்பு : காகிதம், காந்த நாடா போன்ற ஒரு தரவு ஊடகத்தின் விளிம்பு. இது நாடா இயக்கிக்குள் அல்லது நாடா படிப்பிக்குள் அதனை இட்டுச் செல்கிறது.

gulp : விழுங்கள்.

gun : வீச்சுப்பொறி : காத்தோட் கதிர்க் குழாயில் எலெக்ட்ரான் ஒளிக்கற்றையை உருவாக்கும் எலெக்ட்ரோடுகளின் குழு.

gunzip . ஜி-விரிப்பு : ஜுஸிப் எனப்படும் பயன்பாட்டு நிரல் மூலம் இறுக்கிச் சுருக்கப்பட்ட கோப்புகளை மீண்டும் விரிக்கச் செய்கின்ற பயன்பாட்டு நிரல். ஜிஎன்யு அமைப்பின் படைப்பு.

guru : குரு; ஆசான் : நுண்மான் நுழைபுலம் மிக்க ஒரு தொழில் நுட்ப வல்லுநர். அவர் சார்ந்த துறையில் எவ்விதச் சிக்கலுக்கும் தீர்வு சொல்லும் வல்லமை படைத்தவர். ஐயங்களுக்கும் கேள்விகளுக்கும் அறிவார்ந்த முறையில் விளக்கம் தருபவர்.

gutter : வடிகால் : பன்முகப் பத்தி உருவமைவில், பத்திகளிடையிலான இடைவெளி. இது நூல் வெளியீட்டில் பயன்படுகிறது. எடுத்துக்காட்டு : DTP.

. gy : . ஜிஒய் : ஒர் இணைய தள முகவரி கயானா நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப் பிரிவுக் களப் பெயர்.

gynoid : ஜைனாய்ட் : எந்திரப் பெண் போன்ற மனித வடிவம்.

. gz : ஜிஇஸட் : யூனிக்ஸில் ஜிஸிப் (gzip) என்னும் இறுக்கிச் சுருக்கும் நிரல் மூலம் குறுக்கிய காப்பகக் கோப்புகளை அடையாளம் காட்டும் வகைப் பெயர் (extension).

gzip : ஜிலிப் : கோப்புகளை இறுக்கிச் சுருக்கப் பயன்படும் நிரல். இது ஜிஎன்யு-வின் பயன்பாட்டு மென் பொருளாகும்.