பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/675

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

half menu

674

halt



முறையினை கையால் நிறுத்தும் வரை அதன் நிறைவேற்றத்தை நிறுத்தி வைக்கிற செயல் முறைக் கட்டளை.

half menu : துணைக் கட்டளைப் பட்டியல்.

half router : அரைத் திசைவி : ஒர் இணக்கியைப் பயன்படுத்தி, ஒரு குறும்பரப்புப் பிணையத்தை தகவல் தொடர்புத் தடத்தில் (இணையத்தில் இணைப்பது போன்று) இணைக்கும் ஒரு சாதனம்.

half subtractor : அரைக் கழிப்பி.

halftone : நுண்பதிவுப் படம் : ஒரு ஒளிப்படத்தை அல்லது உருவப் படத்தை சம இடை வெளியில் அமைந்த வேறுபட்ட அளவுகளில் அமைந்த புள்ளிகளைக் கொண்ட நகலாகப் படியெடுத்தல். ஒளிப் படத்திலுள்ள ஒளி மாறுபாட்டு அளவுகளை சாம்பல் நிறச் சாயையில் காட்டுவது. உருவப்படத்தில் சற்றே இருள் சாயலுள்ள பகுதியிருப்பின், நுண்பதிவுப் படத்தில் அமையும் புள்ளி பெரிதாக இருக்கும். மரபு வழியிலான பதிப்புத் துறையில், உருவங்களை ஒர் இடைத்திரையின் வழியாக ஒளிப்படம் எடுத்து இத்தகைய நுண்பதிவுப் படங்களை உருவாக்குவர். கணினிப் பதிப்புத் துறையில் நுண்பதிவுப்படப்புள்ளி என்பது ஒளியச்சுப்பொறி அல்லது இலக்கமுறை உருச்செதுக்கி (Image setter) யால் அச்சிடப்பட்ட புள்ளிகளின் தொகுப்பாக இருக்கும். இரண்டு முறையிலும் நுண் பதிவுப் படப்புள்ளிகளின் எண்ணிக்கை ஒர் அங்குலத்தில் இத்தனை வரிகள் என அளவிடப்படுகிறது. அதிகத் தெளிவுள்ள அச்சுப்பொறியெனில் அதிகப் புள்ளிகள் இடம் பெற்று படத்தின் தரம் மிகும்.

half toning : மங்கல் முறை : கறுப்பு-வெள்ளை காட்சிப் பின்னணியில் கிரே அளவுகளை உருவாக்க மாறும் அடர்த்தியில் புள்ளி அமைப்புகளைப் பயன் படுத்துதல்.

halfword : அரைச்சொல் : கணினி கையாளும் சொல்லின் பிட் (துண்மி) எண்ணிக்கையில் பாதி. ஒரு சொல் 32 துண்மிகள் (பிட்) எனில் அரைச் சொல் என்பது 16 துண்மி (பிட்) களை அல்லது இரண்டு பைட்டு களைக் கொண்டிருக்கும்.

halt : நிறுத்துகை.