பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/676

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

halting problem

675

hand scanner



halting problem : நிறுத்துச் சிக்கல் : அல்கோரிதம் இல்லாத தீர்வு காணத் திட்டம் இல்லாத சிக்கல்.

halt instruction : நிறுத்துகை ஆணை.

hammer : சுத்தியல் : ஒர் அச்சடிப்பியில், தட்டச்சு முகப்பை நாடாவுக்கும் காகிதத்துக்கு மிடையில் நகர்த்துகிற அல்லது காகிதத்தை நாடாவுக்கும் தட் டச்சு முகப்புக்கும் இடையில் தள்ளிவிடுகிற செயல்முறை.

hamming code : ஹாமிங் குறியீடு; ஹாமிங் குறிமுறை ஹாமிங் சங்கேதம் : தானாகவே பிழை திருத்திக் கொள்ளும் ஏழு துண்மி பிழைதிருத்தும் தரவுக் குறியீடு.

hand calculator : கைக் கணிப்பி : கையில் வைத்துக் கொள்ளக் கூடிய கணிப்பி. சிக்கலான கணக் கீடுகள் உட்பட கணிதச் செயல்பாடுகளைச் செய்ய ஏற்றது.

hand-device : கைச் சாதனம்.

hand-held computer : கையகக் கணினி; கையடக்கக் கணினி : எடுத்துச்செல்லக்கூடிய, பேட்டரியால் இயங்கும் கணினி. பேசிக் மொழி மூலம் நிரலாக்கத் தொடர் அமைத்து பலவகையான பணிகளுக்குப் பயன்படுத்தலாம். Packet Computer என்றும் அழைக்கப்படுகிறது.

கையகக் கணினி


hand-held scanner : கைப்பிடி நுண்ணாய்வுக் கருவி : ஒர் உருக் காட்சியை நுண்ணாய்வு செய்வதற்குக் கையினால் இயக்கப்படும் ஒர் ஒளியியல் நுண்ணாய்வுக் கருவி. நுண்ணாய்வுத் தலைப்பின் அடியிலுள்ள சிறிய உருளைகள் கையசைவினை நெறிப்படுத்துகின்றன.

hand pointer : கைச் சுட்டு முனை : விண்டோஸ்-3. 1 மற்றும் பிற விண்டோஸ் சார்ந்த, உள்ளுக்குள் நேரடி உதவிச் சாதனம் கொண்டுள்ள பொருள்களுடன் பணியாற்றுகையில், தொடர் புடைய உதவித் தலைப்புகளுக் கிடையில் நீங்கள் தாவும்போது தோன்றும் சுட்டுமுனை வடிவம்.

hand scanner : கை நுண்ணாய்வுக் கருவி : பிற கணினி