பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/677

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

handle

676

hang


மென்பொருள்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள ஆவணங்களுக்காக உருக்காட்சிகளை நுண்ணாய்வு செய்வதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு சாதன்ம். படங்களை வாசகத்துடன் இணைப்பதற்குப் பயன் படுத்தப்படுகிறது.

handle கைப்பிடி : ஒரு கோப்பினை அணுகுவதற்கு இயல்விக்கிற ஒரு மதிப்பளவு (இது ஒரு மாறிலியில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும்). கணினி வரைகலையில், உருக்காட்சியை நகர்த்துவதில் அல்லது மறு உருவாக்கத்தில் ஒர் உருக்காட்சி யுடன் இணைக்கப்பட்டுள்ள ஒரு நுண்ணிய சதுரம். ஒரு சறுக்குச் சட்டத்தை இதன்மீது நகர்த்தி, ஒரு விசையை அல்லது கட்டுப் பொறியினை அழுத்துவ தன் மூலம் கைப்பிடி தேர்ந் தெடுக்கப்படுகிறது. ஒரு கோப்புக்குக் குறித்தளிக்கப்பட்டுள்ள ஒரு தற்காலிகப் பெயர்.

handler : கையாளி : ஒரு குறிப் பிட்ட உள்ளீடு, வெளியீடு, சேமிப்பகச் சாதனம். கோப்பு அல்லது நிறுத்தும் வசதியினைக் கட்டுப்படுத்துவதற்கென்றே உருவாக்கப்பட்ட நிரலாக்கத் தொடர்.

handset : ஒலியுறுப்பு : ஒலி பெருக்கியும், ஒலி வாங்கியும் கொண்டிருக்கிற தொலைபேசியின் உறுப்பு.

handshaking : கைகுலுக்கல்; கைகுலுக்கல் முறை : தரவுத் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள இரண்டு கணினிகள் அல்லது ஒரு கணினியும் ஒரு வெளிப் புறச் சாதனமும் ஏற்படுத்திக் கொள்ளும் நடைமுறைகள்.

handsharing logic : கைகுலுக்கல் தருக்க முறை : நிறை வேற்றப்பட்டுள்ள இனங்கள் பற்றிக் கணினி பதில் சைகை அனுப்புகிற ஒருவகைக் கணினி இடை முகப்பு வடிவமைப்பு.

hands-on கைகளால் : கை வைத்த செயல் சார்பான : ஒரு கணினி அமைப்பை நேரடியாகப் பயன்படுத்துவது பற்றியது.

handwriting recognition : கையெழுத்துக் கண்டறிதல், கையெழுத்து அறிதல் : ஒரு கையெழுத்தைச் சோதிக்க அல்லது தரவு உள்ளடக்கத்தைக் கண்டறிய கணினி கட்டுப்பாட்டு துண் ணாய்வுச் சாதனம் (ஸ்கேனர்) மூலம் கையெழுத்தை நுண் ணாய்வு (ஸ்கேனிங்) செய்வது.

hang : தொங்கல் : விசைப் பலகை செயற்படாமல் கணினி திடீரென நின்றுவிடும்போது ஒரு பொறியமைவு தொங்கி