பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/679

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

hard disk

678

hard disk drive



பட்டியல்கள், ஆவணங்கள் அல்லது குறிப்புரைகள் போன்ற படிக்கக்கூடிய வடிவிலுள்ள எந்திர வெளியீட்டின் அச்சிடப்பட்ட பிரதி. Soft Copy-க்கு எதிர்ச் சொல்.

hard disk : நிலை வட்டு : வேகமான துணைசேமிப்பகச் சாத னம். கணினியின் உள்ளே நிரந்தரமாக அமைக்கப்படும் அல்லது

நிலைவட்டு

ஒரு தனிப் பெட்டியில் வைக்கப் படும். வாைவியைப்போன்று பல மில்லியன் எழுத்துகள் அல் லது எண்மி (எட்டியல்) களைச் சேமிக்கும் திறன் ஒரு தனி நிலை வட்டுக்கு உள்ளது. Floppy disk என்பதற்கு எதிர்ச்சொல்.

hard disk backup programme : நிலை வட்டுக் காப்பு நிரல்.

hard disk controller : நிலை வட்டுக் கட்டுப்படுத்தி : ஒரு நிலை வட்டு இயக்கிக்கு ஒர் இடைமுகப்பினை அளித்து, அதனை மேற்பார்வையிடுகிற மின்னணுவியல் சுற்றுநெறி. சுருக்கம் : HDC இதில் பல வகைகள் பயன்பாட்டில் உள்ளன. எடுத்துக்காட்டு : ESD, MFM, SCSI, ST 506.

hard disk drive : நிலைவட்டு இயக்கி : ஒரு நிலை வட்டுக்கு எழுத்து படிப்புச் செயற்பாடுகளைச் செய்கிற ஒரு மின் எந்திரவியல் சாதனம். இதில் குறைந்தது ஒரு எழுத்து / படிப்பு முனை இருக்கும். இது, வட்டிலுள்ள வட்டினை அணுகி, அதனை நாளது தேதிவரைப் புதுப்பிக்கிறது. வட்டு இயக்கியானது, வட்டின் தட்டினை நிமிடத் திற்கு 3, 600 சுழற்சிகள் என்ற வேகத்தில் சுழற்றுகிறது. இதனால், வட்டின் எல்லாப் பகுதிகளும், துரித இடைவெளி களில் எழுத்து /படிப்பு முனை யின் கீழ் வருகின்றன. சுருக்கப் பெயர் : HDD.