பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

American Standard Code

67

ΑΜΙS


சேவைகளை நிர்வகிக்கிறார்கள். தகவல் தொடர்பு சந்தை, தகவல் திட்ட சேவைகள், தகவல் தொடர்பு அடிப்படைகள் ஆகியவற்றில் தேடுதல், தயாரிப்பு ஆய்வு ஆகிய வற்றை மேற்கொள்கிறார்கள்.


American Standard Code for Information Interchange (ASCII) : தகவல் பரிமாற்றத்துக்கான அமெரிக்கத் தரக் குறிமுறை.


American Statistical Association (ASA). அமெரிக்க புள்ளியியல் சங்கம் : புள்ளி விவர இயலை மேம்படுத்துவதைக் குறிக்கோளாகக் கொண்ட பன்னாட்டு அமைப்பு. 1983இல் உருவாக்கப்பட்டது. முடிவுகளை மேற்கொள்வதற்கும், முன் அறிவிப்புச் செய்வதற்கும் கையாளப்படும் உத்திகளின் தரத்தை உறுதி செய்ய ஆய்வு மற்றும் பயன்பாட்டில் புள்ளி விவரங்களின் தரத்தை பேணுகிறது. தொழில் முறை அறிவைப் பரிமாறுதல், வளர்ச்சிகளை அறிவித்தல் மூலம் மாணவர்களை வணிகத்துக்கும் தொழில் துறைக்கும் தயார் செய்கிறது.


AMI BIOS : அமி பயாஸ் : ஐபிஎம் ஒத்தியல்புக் கணினிகளில் பயன்படுத்துவதற்கென அமெரிக்கன் மெகாட் ரெண்ட்ஸ் நிறுவனம் (AMI) தயாரித்து விற்பனை செய்யும் ரோம் பயாஸ் (ROM BIOS). ரோம் சிப்பிலேயே பயாஸ் செயல் முறைகளுடன் மென்பொருள் தகவமைவு (Configuration) விவரங்களையும் உள்ளடக்கி யிருப்பது இதன் சிறப்புக் கூறாகும். பயனாளர் தன் கணினி யின் நினைவகம் மற்றும் வட்டுகள் பற்றிய தகவமைவு விவரங்களை மாற்றியமைக்க தனியாக ஒரு வட்டினைப் பயன் படுத்தத் தேவையில்லை.


Amiga : அமிகா : பிரபலமான குறுங் கணினி. காமடோர் இன்டர் நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பு.


அமிகா

AMIS : Audio Media Intergration Standard : 'கேட்பொலி ஊடக ஒருங்கிணைப்புத் தரம்.