பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/681

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

hard page break

680

hardware



ஒட்டுக் குறி : எழுத்துக்கூட்டும் போது போட வேண்டிய சிறிய இடைக்கோடு. 11 துளை போன்றவற்றில் இதைப் பயன் படுத்துவார்கள். எப்போதும் அச்சிடப்படும். Soft Hyphen-க்கு எதிர்ச்சொல்.

hard page break : வன்பக்க முறிப்பு.

hard return : வன் மீள்வு; கட்டாய முறி : மீள்வு விசையை அழுத்தி ஒரு வாசக ஆவணத்தில் பதிவு செய்யப்படும் குறியீடு. DOS, OS/2 வாசகக் கோப்பு கள் ஒரு CRILF இணையினைப் பயன்படுத்துகின்றன. இதனைத் திரையில் கண்ணுக்குப் புலனா கும் ஒரு மாறி குறியீடாகக் காட் டலாம். அல்லது கண்ணுக்குப் புலனாகாத குறியீடாகவும் இருக்கலாம். இது, "மென் மீள்வு" (soft return) என்பதிலிருந்து மாறுபட்டது.

hard sector : வன் பகுதி : நெகிழ்வட்டில், உற்பத்தி செய்யப்படும்போதே அமைக்கப்படும் ஆப்பு வடிவ சேமிப்புப் பிரிவு. பல்வேறு பதிவுகளைக் குறிப்பிட வட்டில் துளைகளிட்டு அடையாளப்படுத்தப்படுகிறது. soft sector-க்கு எதிர்சொல்.

hard SectOred diSk : வட்டப் பிரிவு துளைவட்டு : வட்டிலுள்ள ஒவ்வொரு வட்டப் பிரிவின் தொடக்கத்தையும், உணர்விகள் (sensors) அடை யாளம் காண்பதற்கு ஏதுவாக, துளையிடப்பட்டுள்ள நெகிழ் வட்டு.

hard space : கட்டாய இடைவெளி; வன் இடவெளி : சொல் பகுப்பானில் இந்த இடவெளி, வாசகத்தின் பொருளுக்கு மிக முக்கியமானதாகும். எடுத்துக் காட்டு : "திரு ரஜ்னி" என்ற பெயரை இரண்டு வரிகளாகப் பிரிப்பது தவறான முறை யாகும். இரு சொற்களுக்கு மிடையில் ஒரு கட்டாய இட வெளியைச் செருகுவதன்மூலம் இரு சொற்களையும் ஒரே சொல்லாகக் கருத முடியும்.

hardvard mark - | : ஹார்ட்வர்ட் மார்க் | : "ஹார்ட்வர்ட்ஸ் ஹோ வர்ட்" (அய்க்கென்) என்ற அமைவனத்தின் கோட்பாட்டினை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஒரு மின் எந்திரவியல் கணினி.

hardware : வன் பொருள்; வல்லியல்பு; வன்சாதனம் : உருப் பொருள், இயங்கு பொருள், செயல் உறுப்பு, மின்னணு, காந்த, மற்றும் எந்திரச் சாதனங்கள் போன்ற பருப்பொருள், Software - உடன் வேறுபடுத்திப் பார்க்க.