பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/683

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

hardware flow control

682

hardware scrolling



மின் - எந்திரவியல் உறுப்புகளில் (வட்டுகள், நாடாக்கள்) அல்லது ஒரு கணினிப் பொறியமைவில் செயற்பணிகள் தவறாக நடைபெறுதல். இது "மென்பொருள் செயல் நிறுத்தம்" (software failure) என்பதிலிருந்து மாறுபட்டது.

hardware flow control : வன்பொருள் பாய்வுக் கட்டுப்பாடு.

hardware interrupt : வன் பொருள் குறுக்கீடு : வன் பொருள் செயற்பாட்டினால் ஏற்படும் இடைத் தடுப்பு. இது புற நிலைச் சாதனத்தால், ஆதாரச் சிப்புகளில் அல்லது மையச் செயலகத்தில் (CPU) ஏற்படலாம்.

hardware key : வன்பொருள் விசை; வன்பொருள் சாவி : சட்ட விரோதமாக மென்பொருளைப் படியெடுத்துக் கொள்வதைத் தடுக்கும் வழி. ஒரு கணினியின் விரிவாக்கப்பகுதி அல்லது போர்ட்டில் பொருத்தி, நிரலாக்கத் தொடர் களவுத் தடுப்பு மென்பொருளுடன் சேர்ந்து மட்டும் இயங்கக்கூடியது.

hardware monitor : வன்பொருள் திரையகம் : ஒரு கணினியின் செயல்திறனைப் பகுப்பாய்வு செய்வதற்காக அதனுடன் சுற்று வழிகளுடன் இணைக்கப்பட்டுள்ள சாதனம்.

hardware profile : வன்பொருள் குறிப்புரை : ஒரு கணினிக் கருவி பற்றிய வரையறைகள் மற்றும் பண்பியல்புகள்பற்றிய ஒரு தரவுத் தொகுப்பு. புறச்சாதனங்களைக் கணினியுடன் இணைத்துச் செயல்பட வைக்க, இந்தத் தரவுக் குறிப்புரையின் அடிப்படையிலேயே கணினியில் வரையறுப்புகள் செய்து தயார் படுத்த வேண்டும்.

hardware reliability : வன் பொருள் நம்பகம் : வன்பொருள் தன் செயற் பணிகளை குறிபபிட்ட கால அளவுகளுக்குச் செய்யும் திறம்பாடு உடையது எனக் கூறும் ஒர் அறிக்கை.

hardware reset : வன்பொருள் மீட்டமை.

hardware resources : வன் பொருள் மூலாதாரங்கள்; வன் பொருள் வளம் : மையச் செயலக நேரம், உள் சேமிப்பக இடம், நேரடி அணுகு இருப்பக இடம், உள்ளீடு, வெளியீடு சாதனங்கள் ஆகிய அனைத்தும் இருந்தால்தான் தரவு செயலாக்கம் தானியங்கியாகவும், திறனுடையதாகவும் இருக்கும்.

hardware scrolling : வன் பொருள் சுருளாக்கம் : ஒளிப் பேழைச் செங்குத்துச் சுருளாக்க உத்தி. இது, தரவுக் காட்சியாகக்